பஸ் மோதியதால் குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தை !

0
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தனசேகர் (வயது 43) என்பவர் ஓட்டினார்.
பஸ் மோதியதால் குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தை !
பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலை யோரம் பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு சரக்குவேன் மீது எதிர் பாராத விதமாக அந்த பஸ் பயங்கரமாக மோதியது. 

இதில் நிலை தடுமாறிய பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக்  கொண்டு மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது. 

அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. 

கண் இமைக்கும் நேரத்தில் ஆம்னி பஸ், எதிரில் வந்த தனியார் பஸ் மீது அதி வேகமாக மோதியது. விபத்தில் தனியார் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. 

ஆம்னி பஸ் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இருக்கைகள் கழன்று வெளியே விழுந்தன, கண்ணாடிகள் நொறுங்கின. சரக்கு வேனும் உருக்குலைந்தது. 

நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பஸ்களிலும் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காய மடைந்தனர்.

ஆம்புலன்சுகள் வரவழைக்கப் பட்டு காயமடைந் தவர்கள் சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக் காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் பெயர் விவரம் தெரிய வந்தது.

ஆம்னி பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் ஜரிகம் பள்ளியை சேர்ந்த ஜிம் ஜேக்கப் (58), புது மாப்பிள்ளை யான ஆலப்புழையை சேர்ந்த ஷானுதரியன் (28),

திருச்சூரை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் (66), அவருடைய மனைவி அல்போன்சா (61), இவர்களின் மகள் டினு ஜோசப் (32), 
அவருடைய கணவர் சிஜி வின்சென்ட் (35), கேரள மாநிலம் பத்தினம் திட்ட பகுதியை சேர்ந்தவரான ஆம்னி பஸ் மாற்று டிரைவர் ஜான் (40) ஆகியோர் இறந்தது தெரியவந்தது.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெங்களூரு வில் தங்கி வேலை பார்த்தவர்கள் எனவும், ஊருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. 

பலியானவர்கள் மற்றும் காயமடைந் தவர்களின் உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை ஈதனின், பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகிய 4 பேரும் பலியானார்கள். 

அதிர்ஷ்ட வசமாக ஈதன் மட்டும் உயிர்தப்பினான். அவன் தனது தாயின் உடல் அருகே நின்று ‘அம்மா, அம்மா’ என்று கூறி அழுதான். இதை வைத்து அந்த பெண் தான் அவனது தாய் என்பதை போலீசார் அறிந்தனர். 

அந்த சிறுவனை ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து கேரளாவில் இருந்து வந்த டினு ஜோசப்பின் தங்கை தானு அன் ஜோசப்பிடம் போலீசார் ஈதனை ஒப்படைத்தனர்.

விபத்தில் இறந்த ஷானுதரிய னுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பி தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

டாக்டர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings