கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தையை அழைத்து ரஜினி ஆறுதல் !

0
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). 
இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவரு க்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது. 

இது இரு வீட்டாரு க்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். 

இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால் இரண்டு குழந்தை களையும் கொலை செய்து விட்டு 


தப்பி யோடிய தாய் அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார்.

இந்தநிலையில், குன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தை களின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து ரஜினி ஆறுதல் கூறினார். 

அதனை தொடர்ந்து "காலா" பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, மதுரை திரும்பிய போது 

விபத்தில் 2 கால்களை யும் இழந்த காசி விஸ்வநாதனை நேரில் அழைத்து ரஜினி ஆறுதல் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings