காசாந்திட்டு மறைந்த தாய்க்கு சிலை வைத்த பிள்ளைகள் !

0
புதுச்சேரி அருகே தங்களை ஈன்று அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கி மறைந்த 
தாய்க்கு பிள்ளைகள் 5 பேர் ஒன்று சேர்ந்து சிலை அமைத்து, அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கி உள்ளனர்.

காசாந்திட்டு பகுதியைச் சேர்ந்த எல்லம்மாளு க்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் முன்னமே கணவர் மறைந்து விட, 5 பேரையும் வளர்க்கும் பொறுப்பை கையிலெடுத்த எல்லம்மாள், 


கூலி வேலை களுக்குச் சென்றும் இட்லி விற்றும் பிள்ளைகளைப் படிக்க வைத்துள்ளார். 

அவருக்கு உதவியாக படிப்பை பாதியில் உதறி விட்டு மூத்த மகள் வேலைக்குச் சென்றுள்ளார்.

இதனால், நன்கு படித்த அவரது பிள்ளைகள் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிகின்றனர். 

இந்நிலையில், எல்லம்மாள் கடந்த ஜூலை மாதம் தமது 72வது வயதில் இயற்கை எய்திய நிலையில், 

அவரது பிள்ளைகள் காசாந்திட்டு பகுதியில் அவர் வாழ்ந்த வீட்டை நினை வில்லமாக்கி அங்கு அவருக்கு சிலை வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings