விஷ்ணுபிரியாயுடன் உல்லாசம் அனுபவித்த டிரைவர் - கொடைக்கானல் கொலை !

0
சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் கிருஷ்ணன். இவரது மனைவி விஷ்ணு பிரியா (வயது 35). துணை நடிகை.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா நடிகர் சூர்யா நடித்த மாயாவி படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பங்களா கொடைக்கான லில் உள்ளது. 

இவரது கணவர் ரமேஷ் கிருஷ்ணா போதை பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப் பட்டதால் கொடைக்கானல் பங்களாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது கொடைக்கானலைச் சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரன் என்பவரு க்கும் விஷ்ணு பிரியாவு க்கும் தொடர்பு ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. 

இந்த விபரம் விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணனு க்கு தெரியவரவே பிரபாகரனை கூலிப்படையை ஏவி கொலை செய்தார்.


இந்த கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார் கொலைக்கு காரணமான 

தொழில்அதிபர் சூரிய நாராயணனை பிடிக்க தனிப்படை அமைத்து ஐதராபாத் செல்ல உள்ளதாக கூறினர்.

ஆனால் தனிப்படை போலீசார் இன்னும் ஐதராபாத் செல்ல வில்லை என்றும் அவரை பிடிக்க தயக்கம் காட்டுவ தாகவும் தெரிய வந்துள்ளது. 

விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் ஐதராபாத்தில் மிகப் பெரிய தொழில் அதிபராக உள்ளார்.

அதனால் விஷ்ணு பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். 

அதன்படி கொடைக்கானலில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான பங்களா மற்றும் தோட்டம் உள்ளது. 

இதனை பராமரிப்பதற் காக வேலை யாட்களையும் சூரிய நாராயணன் நியமித்துள்ளார்.

சென்னையில் இருந்து விஷ்ணு பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்போதாவது மட்டுமே கொடைக்கானல் வந்து செல்வார்கள்.

விஷ்ணு பிரியா தனது குழந்தை களுக்காக சென்னையில் தங்கி இருந்துள்ளார். 

கொடைக்கானலில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற் காக அவ்வப்போது கொடைக்கானல் வருவார்.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வருவார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வார். 

அப்போது தான் கொடைக்கானலைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கார் டிரைவர் அறிமுகம் ஆனார்.

முதல் சந்திப்பிலேயே பிரபாகரன் ஜாலியாக பேசி விஷ்ணுபிரியாவை கவர்ந்துள்ளார். 

இதனால் அவர்களு க்குள் நெருக்கம் அதிகரித்தது. உடனே விஷ்ணு பிரியாவின் செல்போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு எப்போது கொடைக்கானல் வந்தாலும் பிரபாகரனையே மதுரை விமான நிலையத்து க்கு வரவழைத் துள்ளார். 

சொகுசு பங்களா இருந்த போதும் அதில் தங்காமல் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கினர். 

மேலும் காருக்குள்ளேயே அவர்கள் அடிக்கடி உல்லாச மாக இருந்துள்ளனர்.

கொடைக்கானல் ஓட்டலில் தங்கி இருந்த போது பல லட்சம் ரூபாயை விஷ்ணு பிரியாவிடம் இருந்து பிரபாகரன் பெற்றார். 

ஒரு முறை பிரபாகரனின் கார் பழுது ஏற்படவே புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

தனது கள்ளக் காதலன் பிரபாகரனை சந்திக்கவே விஷ்ணு பிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்ததுடன் பல நாட்கள் இங்கேயே தங்கி இருந்தார். 

மேலும் சென்னையில் இருந்து வரும் போது பிரபாகரனு க்கு ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

இதனால் பிரபாகரனை 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த சூரிய நாராயணன் சிறிது நாட்கள் பொறுமை யாக இருக்கும்படி விஷ்ணு பிரியாவை சமாதானப் படுத்தியுள்ளார். 

அதன் பிறகு கொடைக்கானல் பங்களாவில் வேலை பார்த்து வந்த செந்தில் குமார் (வயது 37), 


ஊர்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் (28), டீக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது சல்மான் (20), 

அவரது தம்பி மஜித் (18), ஆகிய 4 பேர் மூலம் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இதற்காக ரூ.4 லட்சம் பணம் தருவதாக கூறிய சூரிய நாராயணன் முதல் தவணை யான ரூ.50 ஆயிரம் பணத்தை செந்தில் குமாரின் வங்கி கணக்கில் செலுத்தி யுள்ளார். 

அதன்படி சம்பவத்தன்று பிரபாகரனை அழைத்துச் சென்ற அந்த கும்பல் காருக்குள் கழுத்தை அறுத்து கொலை செய்து 500 அடி பள்ளத்தில் வீசிச் சென்றுள்ளனர். 

தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க காருக்குள்ளும் கொலை செய்யப்பட்ட இடத்திலும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடி விட்டனர். 

ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செந்தில் குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

சென்னையில் உள்ள விஷ்ணு பிரியாவிடம் விசாரணை நடத்த சென்றுள்ளனர். 

ஆனால் கொலைக்கு மூளையாக செயல்பட்ட தொழில் அதிபர் சூரிய நாராயணனை பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings