குற்ற பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு !

0
'குற்ற பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வாய்ப்பில்லை; 
இதற்கான சட்டத்தை, பார்லிமென்ட் இயற்ற வேண்டும்' எனக் கூறி, உச்ச நீதிமன்றம் கைவிரித்ததால், குற்ற பின்னணி உடைய அரசியல் வாதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக அமைந்ததால், நாடு முழுவதும், 1,765 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இருப்பினும், தேர்தலில் நிற்போர், வழக்கு விபரங்களை, தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என, நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'கிரிமினல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் நிலையில்

தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன்,

கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு விபரம்:

உலகின் பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவில் அரசியல், கிரிமினல் மயமாகி வருவது கவலை அளிக்கிறது.

தேர்தலில் குற்றவாளிகள் போட்டி யிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றுவது குறித்து பார்லிமென்ட் பரிசீலிக்க வேண்டும்.

கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர் பார்லிமென்ட் அல்லது சட்ட சபையில் நுழைந்து,

சட்டம் இயற்றும் நிகழ்வில் பங்கேற்பதை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதற்கு தேவையான சட்டத்தை பார்லிமென்ட் இயற்ற வேண்டும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

ஊழலும், அரசியல் களம் குற்ற மயமாதலும் இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேரை அசைத்துபார்க்கும் வகையில் உள்ளன.

இதை தடுக்க பார்லிமென்ட் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அதற்கான விண்ணப்பத்தில் தங்கள் குற்ற பின்னணி குறித்த தகவல்களை பெரிய எழுத்தில் குறிப்பிட வேண்டும்.


அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது.

தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளிடம் தங்கள் குற்ற பின்னணி குறித்த தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளர்களின் குற்ற பின்னணி தகவல்கள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் அனைத்திலும் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.அதில்

நாடு முழுவதும் பார்லி மற்றும் சட்டசபைகளில் உள்ள உறுப்பினர்களில் 36 சதவீதம்

அல்லது 1,765 பேருக்கு எதிராக 3,045 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

பார்லி மற்றும் சட்ட சபைகளின் மொத்த உறுப்பினர் பலம் 4,896.குற்ற பின்னணி உடைய,

வழக்குகளை எதிர் கொண்டுள்ள அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வகையில்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தற்போதைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குற்ற பின்னணி உடைய 1,765 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

தடை இல்லை'


எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் வழக்கறிஞர் களாக பணிபுரிய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:

பார்லிமென்ட் அல்லது சட்டசபை உறுப்பினருக்கு சம்பளம் தரப்படுவதால், அவர் வழக்கறிஞராக பணிபுரிய கூடாது என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

எம்.பி.,க்களின் முதலாளி, இந்த நாட்டின் அரசு அல்ல.இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் விதிகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், வழக்கறிஞர் களாக பணியாற்று வதை தடை செய்ய வில்லை.

எனவே, இவ்விஷயத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings