ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 8 பேர் பலி !

0
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. 
இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள தாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது.

சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோ வில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத் தால் பலர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

இதனிடையே நிலநடுக்கத் தால் இதுவரை 8 பேர் சடலங்களாக மீட்கப் பட்டுள்ளனர். 

மேலும் 32-க்கும் காணாமல் போயுள்ள தால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப் படுகிறது. 


இதனிடையே நிலநடுக்கத் தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 மில்லியன் வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட் டுள்ளது. 

பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த இரு தினங்களாக ஜெபி புயல் ஜப்பான் நாட்டையே புரட்டி போட்டது. 

இந்நிலை யில் ஜெபி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மறைவதற்கு முன்னரே, 

இன்று காலை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ஜப்பான் மக்களை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings