சவுதி அரேபியா நாட்டின் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் பேஸ்புக்,
டுவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் அரசின் செயல் பாட்டை விமர்சிப் பவர்கள் கடும் நடவடிக்கை க்கும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணைய தளங்கள் வழியாக கேலி, கிண்டல்
மற்றும் விமர்சனங்கள் என்னும் போர்வையில் நையாண்டித் தனமான தகவல் களை பரப்பும் செயலை தண்டனைக் குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.
அப்படி செய்பவர் களுக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 லட்சம் ரியால்கள்
(இந்திய மதிப்புக்கு சுமார் 56 லட்சம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும் என அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட் டுள்ளார்.
Thanks for Your Comments