இந்திய பெண்ணை மணந்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த மாப்பிள்ளை !

0
கடலுாரைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிங் பட்டதாரியை, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், திருமணம் செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் - மணிமேகலை தம்பதியின் மகள் சாருலதா, 32; பி.இ., பட்டதாரி. 

இவர், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் ஆங்கிலம் கற்பிக்கும் பணி புரிகிறார். 

அதே நாட்டைச் சேர்ந்த தாமஸ் - க்வேதா தம்பதியின் மகன் லுாகாஸ், 40; கணினி நெட்வொர்க் தொழில் நுட்ப பணியாளர். இருவரும், காதலித்தனர்.


தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த மார்ச் மாதம் 

செக் குடியரசு நாட்டின் பாரம்பரிய முறைப்படி லுாகாஸ், சாருலதாவை மணம் முடித்தார். 

சாருலதா வீட்டில்,தமிழ் பாரம்பரிய முறைப் படியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதை யடுத்து. மணமக்கள் இந்தியா வந்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில், தமிழ் பாரம்பரிய கலாச்சாரப்படி, 

வேட்டி சட்டை அணிந்த லுாகாஸ், சாருலதா வின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings