இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பிச் சென்று விட்ட விஜய் மல்லையா, 
விஜய் மல்லையாவின் தங்க கக்கூஸ் - எத்தனை கோடி?
லண்டனில் தனது வீட்டில் தங்கத்தினால் ஆன கழிப்பறை கட்டி வைத்திருக்கி றாராம்.

வங்கிகளில் கடனாக வாங்கிய கோடிக்கணக் கான ரூபாயை முறையாக திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு பல குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர். 

இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதி பரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கி விட்டு இங்கிலாந்தில் போய் பதுங்கி விட்டார்.

விஜய் மல்லையா மோசடி

இந்தியாவில் உள்ள மல்லையா வின் சொத்துக் களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள். 

வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 
அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடி க்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதோடு நீதி மன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

ரண களத்திலும் குதூகலம்

கடன் வாங்கி விட்டு வெளி நாட்டில் போய் பதுங்கி யிருந்தாலும் குதூகல மாகவே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. 

பெண் தோழி பிங்கி லால்வானியை விஜய் மல்லையா 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 

62 வயது விஜய் மல்லை யாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவு முறையில் உள்ளதாக தகவல் வெளியாது.

மல்லையா வீட்டில் தங்க கக்கூஸ்

அதோடு லண்டனில் உள்ள மல்லையா வின் மேன்சனில் தங்கத்தா லான கழிப்பறை இருப்பது தெரிய வந்துள்ளது. 
விஜய் மல்லையாவின் தங்க கக்கூஸ் - எத்தனை கோடி?
பிரபல எழுத்தாள ரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட் டுள்ளார்.

இந்தியர்களின் பணம்

தங்க கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாக வில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. 
என்னதான் தங்க கழிவறை யாக இருந்தாலும் சந்தன மணமா வீசப் போகிறது. இந்திய வங்கிகளில் கடன் வாங்கி பணத்தை எல்லாம் எப்படி செலவு செய்கிறார்கள் பாருங்கள் விஜய் மல்லையா.