முதலில் பெண்களை நோட்டம் இடுவோம்.. சுள்ளான் !

0
பெண்களைக் குறி வைத்துத் திருடுவது எப்படி என்று பத்து முறை சிறைக்குச் சென்ற பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் போலீஸாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
முதலில் பெண்களை நோட்டம் இடுவோம்.. சுள்ளான் !
சென்னை பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. 

இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. இதனால் வழிப்பறிக் கொள்ளையர் களைப் பிடிக்க பள்ளிக் காரணை போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 

இந்தச் சூழ்நிலையில், வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள், முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். 

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, வந்தேரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கௌதம், 

அவரின் நண்பரான கடலூர் மாவட்டம் வடக்கு வேலூர் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு என்கிற சுள்ளான் பிரபு எனத் தெரிய வந்தது. 
இவர்கள் இருவரும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்துத் 

தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும், இவர்கள் இருவரும் பத்து தடவைக்கு மேல் சிறை சென்றிருப்பதும் தெரிய வந்தது. 

இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி, கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிட மிருந்து 20 சவரன் நகைகள், ஒரு பைக், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

போலீஸாரிடம் கௌதம், பிரபு ஆகியோர் கொடுத்த வாக்கு மூலத்தில், ``தனியாக நடந்து செல்லும் பெண்களை முதலில் நோட்ட மிடுவோம். 

பிறகு அவர்களைப் பின் தொடர்வோம். ஆள் இல்லாத சமயத்தில் தான் செயின், செல்போன் களை கத்தி முனையில் பறிப்போம். எங்களை அடையாளம் கண்டு பிடிக்காத வகையில் ஹெல்மெட் அணிந்திருப்போம். 
பைக்கின் எண்கள் மூலம் எங்களைக் கண்டுபிடிக்காத வகையில் அதையும் மாற்றி விடுவோம். தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் கைவரிசைக் காட்டுவோம். 

அந்தப்பணத்தில் தினமும் ஜாலியாகவும் சொகுசாகவும் வாழ்வோம். சம்பவத்தன்று கூட ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த போது தான் சிக்கிக் கொண்டோம்" என்று கூறியுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings