காப்பக மாணவர்கள் கூறும் பயங்கரம் - எங்களுக்கு சாப்பாட்டுல கலந்து தருவாரு !

0
‘‘ஒண்ணுக்குப் போகுற இடத்துல ஏதேதோ செய்றாங்க...’’

‘‘யாரு இப்படிச் செய்றாங்க?’’

‘‘ஹாஸ்டல் வார்டன்.’’

‘‘இது, ஹாஸ்டல்ல பெரியவங்களுக்குத் தெரியுமா?’’

‘‘தெரியும்.’’

‘‘அவங்க எதுவும் சொல்லறது இல்லையா?’’

‘‘இல்லை!’’

(உரையாடல் தொடர்கிறது...)

நடந்த பாலியல் வன்கொடுமை விசாரணை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளு க்கு அந்தச் சிறுவர்கள் சொல்லும் பதில்கள் ஒவ்வொன்றும் மனதைப் பதற வைப்பதாக இருக்கின்றன. 
காப்பக மாணவர்கள் கூறும் பயங்கரம்



இந்தச் சம்பவம் நடந்தது ஆவடி அருகே உள்ள சிறுவர் காப்பகத்தில். சுமார் 15 ஆண்டுகளு க்கும் மேலாக அந்தப் பகுதியில் இயங்கி வரும் இந்த இல்லத்தில் 40-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர். 

அனைவருமே தாய் தந்தையை இழந்தவர்கள் அல்லது அவர்களால் நிராதரவாக விடப்பட்டவர்கள். மரங்களுக்கு நடுவே உள்ளடங்கி யிருக்கிறது அந்தக் காப்பகம். 
 
அதனுடன் ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியும் இயங்கி வருகிறது. தொடக்கப் பள்ளி முடித்த சிறுவர்கள் அருகில் உள்ள அரசினர் பள்ளியில் படிக்கின்றனர். 

அங்குப் படிக்கும் சிறுவர்கள் தங்களது ஆசிரியர்கள் வழியாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்ற புகாரை அடுத்து, இத்தனை கொடூர உண்மைகளும் வெளி வந்துள்ளன. 

குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் காப்பகத்தின் இயக்குநர்கள் ஜேக்கப் மற்றும் நிர்மலா உட்பட 
நான்கு பேரைக் கைது செய்திருக்கும் ஆவடி அனைத்து மகளிர் காவல் துறையினர், 

குற்றம் சாட்டப்பட்டிரு க்கும் காப்பக வார்டன் சாமுவேலையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கி யிருக்கின்றன.

மற்றொரு பக்கம் வார்டனைப் பற்றி அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளி வந்துள்ளன என்கிறார், 

அந்தப் பகுதி எஸ்.ஐ. பிரதீப். ``தற்போது குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த வார்டன் மீது 2007-ம் வருடமே இதே போன்ற வன்கொடுமை குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. 

ஆனால், அதுகுறித்து காவல் துறையிடம் எவ்விதப் புகாரும் தெரிவிக்கப்பட வில்லை’’ என்கிறார் அவர். `குற்றம் சாட்டப்பட்ட வார்டன் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார். 

பிள்ளைகள் இப்படியான குற்றங்களைக் கூறும் போது அவரிடம் இது குறித்துக் கேட்டால் அத்தனையையும் மறுப்பார். 

தப்பித் தவறி வெளியில் இருப்பவர்க ளிடம் தங்களுக்கு நேரும் கொடுமையைச் சொல்லும் பிள்ளைகளைக் 

காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அடிப்பார்கள்’’ என்று புகார் கூறுகின்றனர், அடையாளம் தெரிவிக்க விரும்பாத அந்தப் பகுதி மக்கள். 

பிள்ளைகளுக்கு இரவு உணவுகளில் புகையிலை கலந்த போதை வஸ்து போன்ற ஒன்றை 

அந்தக் காப்பக வார்டன் கலந்து கொடுத்ததாக வும் பிள்ளைகளில் சிலர் புகார் தெரிவித்திரு க்கின்றனர். 

காப்பகத்தி லிருந்து பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் உட்பட 



அங்கே படிக்கும் நிறைய பிள்ளைகள் அந்தப் போதைப் பொருளை உபயோகிப்பது அதிர்ச்சி.

பள்ளிக் கூடத்துக்கு அருகே விற்க்கப்படும் போதை வஸ்துபிள்ளைகள் கடையில் சென்று கேட்டால் உடனே கிடைக்கும் 

வகையில் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் இந்தப் பொருள்கள் விற்கப் படுகின்றன. 

இந்தப் போதை வஸ்துவுக்கு அடிமையான பிள்ளைகள் காலையிலேயே இதைச் சாப்பிட்டு விட்டு பள்ளிக் கூடத்தில் அரைமயக்க நிலையிலேயே இருப்பதாகவும், 

விற்கும் கடைக்காரர் களைக் கண்டித்தாலும் எவ்வித பயனும் இருப்பதில்லை என்று சொல்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். 

`இந்தப் பொருளைச் சாப்பிட்டால் எங்களுக்குக் காலையில் பசியெடுப்ப தில்லை. 

எங்களுக்கு ஒருவார காலை உணவுக்கு ஆகும் செலவை விட இதற்கு ஆகும் செலவு குறைவு’ 

என்று மாணவர்கள் கூறியதாக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் பகிர்ந்தபோது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.

இதையடுத்து அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிக் கடைகளில் ரெய்டு நடத்திய போலீஸார், சிறுசிறு பாக்கெட்டுகளில் கிடைக்கும் 

புகையிலை வஸ்துப் பொருள்களை அந்தக் கடைகளி லிருந்து கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். 
இருந்தும் இதற்கான நிரந்தரத் தீர்வு என்ன என்பது காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை களில் மட்டுமே தெரியவரும். 

காப்பகம் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் 

அத்தனை பேரும் தற்போது வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர். 

அவர்களுக்குக் குழந்தைகள் நல ஆலோசகர்கள் வழியாக மனம் மற்றும் உடல்நல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் தான் பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் தியோரியா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் 

சிறுவர் காப்பகங்களில் குழந்தைகள் பாலியல் ரீதியாக வன்முறைக் குள்ளாகப்படுவ தாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்திகள் வெளியாகின. 

இதையடுத்து நாடு முழுவதும் இருக்கும் சிறுவர் காப்பகங்களில் சமூகத் தணிக்கை நடத்தப்படும் என மத்திய அரசு ஆணைப் பிறப்பித்தது. 

இதற்கிடையே தமிழகத்திலும் இப்படியான சூழல் ஏற்பட்டிருப்பதை அடுத்து சிறுவர் காப்பகங்களில் இருக்கும் பாதுகாப்பின் மீதான நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
எங்களுக்கு சாப்பாட்டுல கலந்து தருவாரு



இது குறித்துப் பேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புச் செயற் பாட்டாளரும் லயோலோ கல்லூரிப் பேராசிரியருமான ஆன்ட்ரியூ சேசுராஜ், 

`சிறார் காப்பகங்கள் குழந்தைகளு க்குத் தேவையா என்பது தான் இங்கு முதன்மை யான கேள்வி. 

சிறார் நீதிச் சட்டம் (குழந்தைகளுக் கான ஆன்ட்ரியூ சேசுராஜ் அக்கறையும் பாதுகாப்பும் 2015-ன்படி) நிராதரவாக விடப்படும் குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட வேண்டும்... 

அல்லது உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது நிழலில் வளர வேண்டும். 

உறவினர் களுக்குப் பொருளாதாரச் சிக்கல் இருக்கும் நிலையில் அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பதற் கான மாதச் செலவுகளை அரசு வழியாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். 

இந்தச் சூழல் எதுவுமே அமையாத நிலையில் மட்டும் தான் அவர்கள் சிறார் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். 

இது அத்தனையும் அந்த மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். 

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் இப்படியாக மொத்தம் 70,000 குழந்தைகள் 1,300 காப்பகங்களில் தங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். 

அவர்களுக்கு இந்தக் காப்பகங்கள் அவசியமா. 1992-ல் ஐ.நா சபையுடன் இந்திய அரசு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை யின்படி 



ஒவ்வொரு குழந்தைக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அரசு அதைச் செய்ததா. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் குழந்தைகள் தத்தெடுப்பு 

மற்றும் அவர்களுக்கான செலவுகளை அரசு அதிகரிப்பது குறித்த பல வாக்குகளைக் கொடுத்தார். 

ஆனால், அது செயல்படுத்தப் படாமலே போனது. அரசு ஆணைப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் பாதுகாப்புக் கான குழு ஒன்று இயங்க வேண்டும். 

ஆனால், அது அத்தனையுமே பெயரளவில் தான் செயல்பட்டு வருகிறது. 

வேறு எங்கும் வாழ முடியாத சூழலில் பிள்ளைகள் இது போன்ற கொடுமை களை வெளியில் சொல்லாமல் பொறுத்துக் கொள்கிறார்கள். 
இப்படியாகக் காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளு க்குத் தங்களது உரிமைகள் என்ன...

காப்பகங்களில் என்னென்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது... உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். 

அவர்கள் புகார் எழுப்புவதற்கு வசதியாக ஒவ்வொரு காப்பகத்திலும் அரசால் ஒரு தொலைபேசி வசதி உருவாக்கப்படவேண்டும். 

தற்போது மத்திய அரசு அறிவித்திரு க்கும் சமூகத் தணிக்கைகூட இவை அத்தனையும் சரி செய்யப்பட்டால் மட்டுமே முழுமை பெறும்’’ என்றார்.

சமூகம் தன்னைச் சுயபரிசோதனை க்கு உள்ளாக்க வேண்டிய அவசியத்தை இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரச் சம்பவங்களும் நினைவூட்டு கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)