இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் !

0
இந்தோனேஷியாவின் லோம்போக் மற்றும் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 
இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நேற்று இரவு பயங்கர நில நடுக்கம் !
இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நேற்று 80 பேர் பலியாகி நிலையில், இன்று மேலும் 11 பேர் உயிரிழந் துள்ளனர். 

இதனால் பலியான வர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித் துள்ளது. இந்த நில நடுக்கத்தில் சிக்கி 209 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மிக அதிகபட்சமாக வடக்கு லோம்போக் பகுதியில் 72 பேர் பலியாகி உள்ளனர். 3,000 வீடுகள் சேதமடைந் துள்ளன. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 

சேதம் அதிக அளவில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings