இந்தியாவில் குடிகார கணவன் தனது மனைவியின் வாய் மற்றும் கண்களை பசையால் ஒட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் விதிஷாவை சேர்ந்தவர் ஹல்கிராம். இவர் மனைவி துர்கா.
குடி பழக்கத் துக்கு அடிமையான ஹில்கிராம் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து துர்காவை அடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் மனைவியை ஹில்கிராம் அடித்த நிலையில், அவரை எதிர்த்து துர்கா சண்டை போட்டுள்ளார்.
இதில் ஆத்திர மடைந்த ஹில்கிராம், துர்காவின் கண்கள் மற்றும் வாயை பசையால் ஒட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் ஹில்கிராம் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் துர்காவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில், ஹில்கிராமை தேடி வருகிறார்கள்.
Thanks for Your Comments