மென்பொருள் நிறுவன தொழிலதிபரை கடத்த முயன்ற 4 பேர் கைது !

0
சென்னையில் மென்பொருள் நிறுவன தொழிலதிபரை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். 
சென்னை அண்ணாநகரில் ஸ்ட்ரீம் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் 

கொளத்துாரை சேர்ந்த பிரமோத் தாமோதரன் நேற்று இரவு தன் பணி முடிந்து வீடு திரும்பு வதற்காக காரில் ஏற முயன்றவரை 

அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல், தொழிலதிபரின் கண்களை கட்டி, கத்தியால் தாக்கி பணம் கேட்டு மிரட்டி கடத்தி சென்ற போது 


வழியில் மண்ணூர் பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது சூழ்நிலையை பயன்படுத்தி அந்த கும்பல் தப்பியது.

பின்னர் தப்பிய பிரமோத், தனது சகோதரர் உதவியால், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் தனிபடை போலீசாரின் விசாரணையில், ஓட்டேரியை சேர்ந்த ஜானகிராமன் (எ) மணி, 

பிரபாகரன் (எ) அப்பு பிரான்ஸிஸ் மற்றும் இம்ரான் என தெரியவர இன்று அந்த 4 பேரையும் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings