நடத்துநர் இல்லா பேருந்தின் பயண நேரம் குறையும் !

0
சீனாவில் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் சாலைகளில் ஓடத் தொடங்கி யிருக்கும் நிலையில், 
நடத்துநர் இல்லா பேருந்தின் பயண நேரம் குறையும் !
போக்குவரத்துக் கழகத்துக்கு ஆகும் செலவைக் குறைக்க நடத்துநர் இல்லாத பேருந்துகளின் இயக்கம் தமிழகத்தில் தொடங்கி யுள்ளது.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 54 நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கப் படுகிறது.

உதாரணமாக சென்னையில் இருந்து புறப்படும் பேருந்து கோவை செல்கிறது என்றால், சென்னை பேருந்து நிலையத்தில் நடத்துநர் பேருந்துக்குள் சென்று டிக்கெட் கொடுத்து விட்டு இறங்கி விடுவார். 

பிறகு பேருந்து புறப்பட்டால் எங்கும் நிற்காமல் கோயம்பத்தூர் செல்ல வேண்டும். வழியில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தக் கூடாது என்பது உத்தரவு. 

சென்னையில் கதவுகள் மூடப்பட்டால் கோவையில் தான் கதவுகள் திறக்கப்பட வேண்டும். 
இதனால், ஒவ்வாரு நடத்துநர் இல்லாத பேருந்துகளின் பயணமும் 20 முதல் 30 நிமிடங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், இந்த வகைப் பேருந்துகள் உணவுக் காகவும் வழியில் நிறுத்தப்படக் கூடாது என்றால், நோயாளிகள், 

மூதியவர்கள் போன்றவர்கள் உணவு கிடைக்காமலும், கழிவறை செல்ல முடியாமலும் போக வாய்ப்பு உண்டு.

போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டு மொத்தமாக 8,000 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் களுக்கு பற்றாக்குறை உள்ளது. 

இதனால் பல பேருந்து சேவைகள் ரத்து செய்யப் படுகின்றன. தற்போது நடத்துநர் இல்லாத பேருந்துள் மூலம் சேவைகள் ரத்தாவது தவிர்க்கப்படும்.

இடைநில்லா பேருந்து களும், நடத்துநர் இல்லாத பேருந்துகளும் செலவைக் குறைத்தாலும் வருவாயையும் சேர்த்துக் குறைக்கும் என்பது 

பயணிகளின் வாதம். ஒரு பேருந்து காலி இருக்கை களுடன் சென்று கொண்டிருக்கும் போது, 
நடு வழியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணி இருந்து ஆனால் அவர் அந்த பேருந்தில் பயணிக்க முடியாத நிலை இருவருக்குமே இழப்பு தான். 

காலி இருக்கை களுடன் செல்லும் பேருந்து களால் இழப்பு ஏற்பட்டால், அந்த பேருந்து சேவையையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

சென்னையில் இருந்து வேலூருக்கு செல்லும் 115 பேருந்து சேவைகளில் 17 சேவைகள் நடத்துநர் இல்லாத பேருந்துகளாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இந்த பேருந்து புறப்படும்.

இதே போல, சென்னை - புதுச்சேரி (8 சேவைகள், சென்னை - திருவண்ணாமலை (13 சேவைகள்) மற்றும் 

சென்னை - விழுப்புரம் (18 சேவைகள்) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப் படுகின்றன.

செலவைக் குறைக்க இந்த நடத்துநர் இல்லாப் பேருந்துகள் செயல்படுத்தப் பட்டாலும், இதற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பி யுள்ளது.
அதாவது, வெறும் டிக்கெட் கொடுப்பவர் என்று நடத்துநரைக் கருதக் கூடாது. அவரது பணியே அலப்பரியது. 

ஒரு இக்கட்டான சூழ்நிலையில், விபத்து நிகழும் போது ஓட்டுநருக்கு நடத்துநரின் தேவை அவசியமாக இருக்கும். ஓட்டுநருக்கு உதவி யாளராகவும் நடத்துநர் இருப்பார். 

நடத்துநர் இல்லாத பேருந்துகள் இயக்கப் படுவது பாதுகாப்பற்றது என்று சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.

இது பற்றி ஒரு விரிவான அலசல்: 

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நடத்துநர் இல்லா விரைவுப் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கத் தொடங்கி யுள்ளன.

தமிழகத்தில் நடத்துநர் இல்லாத பேருந்துகளை இயக்க ஏதுவாக மத்திய அரசின் புதிய போக்குவரத்து விதிகளின்படி கட்டப் பட்டுள்ள பேருந்துகள் விழுப்புரம், கோயம்புத்தூர், 
சேலம், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக த்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்றது.

இடை நில்லா பேருந்துகள்: மதுரை, கும்பகோணம், சேலம் கோட்டங்களில் இருந்து இத்தகைய புதிய பேருந்துகள் இயக்கப் படுகின்றன. 

குறிப்பாக எங்கும் நிற்காமல் செல்லும் பாயிண்ட் டு பாயிண்ட்' எனப்படும் இடைநில்லா' பேருந்து களாக அவை இயக்கப் படுகின்றன. 

இதில் பயணிகளிடம் பயணச் சீட்டு வழங்க நடத்துநர் இருக்க மாட்டார்.

இத்தகையப் பேருந்துகள் சென்னை - வேலூர், சென்னை - திருவண்ணாமலை, சேலம் - ஒசூர், மதுரை - திருநெல்வேலி, தென்காசி - திருநெல்வேலி, 

மதுரை - திருச்சி, திருச்சி - காரைக்குடி, நாகர்கோவில் - திருநெல்வேலி ஆகிய வழித்தடங் களில் இயக்கப் படுகிறது.
ஏற்கெனவே இத்தகைய திட்டத்தில் ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால், வேலூர்-திருப்பதி, காஞ்சிபுரம் - திருப்பதி, 

சென்னை - திருப்பதி ஆகிய சில இடங்களுக்கு மட்டும் நடத்துநர் இல்லாமல் சில பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

சீர்திருத்த நடவடிக்கை ஏன்?: சுமார் ரூ.29 ஆயிரம் கோடி கடனில் சிக்கியுள்ள அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகங்கள், 
நடத்துநர் இல்லா பேருந்தின் பயண நேரம் குறையும் !
கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும், தனது மொத்த வருவாயில் 51.4 சதவீத நிதியை போக்குவரத்து ஊழியர் களுக்கு ஊதியமாக வழங்கி யுள்ளன. 

மாநிலம் முழுவதும் 1.26 லட்சம் ஊழியர்கள் இப்போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிகின்றனர். மேலும் டீசல், ஆயில் உள்ளிட்ட எரிபொருளுக்கு 28.3 சதவீத நிதி செலவிடப் படுகிறது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை, 8 அரசுப் போக்கு வரத்துக் கழகங் களுக்குச் சொந்தமான 22,203 மொத்தப் பேருந்துகளில் 2.1 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

இதனால் நாளொன்றுக்கு ரூ.25.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த காலங்களை ஒப்பிடுகை யில் குறைவுதான்.

நடப்பாண்டு தொடக்கத்தில் தமிழக அரசால் உயர்த்தப் பட்ட பேருந்துக் கட்டணத் தால் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்து விட்டது. 

இதனால் 10 முதல் 15 சதவீதப் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. எனவே போக்கு வரத்துக் கழகங்களின் நிதி நிலைமையைக் 

கருத்தில் கொண்டு நடத்துநர் இல்லா பேருந்தை இயக்குவது உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றனர்.
கடந்த 20 மாதங்களாக போக்கு வரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. 

இதனால் ஏற்படும் சிக்கல் களையும், செலவையும் மிச்சப் படுத்தவே இந்த நடத்துநர் இல்லாப் பேருந்து திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

நடத்துநர் இல்லாத பேருந்து என்றால், இந்தப் பேருந்து வேறெங்கும் நிற்காது என்பதால் பேருந்தில் நடத்துநர் கிடையாது. 

பேருந்து புறப்படும் முன்பு, பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு நடத்துநர் பயணிகளிடம் பணத்தைப் பெற்று, பயணச்சீட்டு வழங்கி விட்டு இறங்கி விடுவார். 

நடத்துநர் இறங்கிய பிறகு, பேருந்தின் தானியங்கிக் கதவுகளை ஓட்டுநர் மூடி விடுவார். அதன் பிறகு பயணச்சீட்டு இல்லாத வர்கள் பேருந்தில் ஏற முடியாது. 

இதன் மூலமாக 8 பேருந்து களுக்கு 8 நடத்துநர்கள் தேவை என்பது குறைந்துள்ளது.
விழுப்புரத்தி லிருந்து மொத்தம் 25 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப் பட்ட நிலையில் இந்த புதிய பேருந்துகள் கூடுதலாக இயக்கப் படாது என்றும், 

பழைய பேருந்துகளில் 8 நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக இந்த இடைநில்லாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், இந்த பேருந்து சேவை கிடைக்காமல் திண்டிவனம், மதுராந்தகம், விக்கிர வாண்டி பயணிகள் பாதிக்கப் படலாம். 

இதே போல இடைநில்லா பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிறுத்தங் களுக்கு இடையே பயணிக்கும் பயணிகளும் வெகுவாக பாதிக்கப் படுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings