பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப் பாளர்களை சந்தித்து வருகிறார்.
இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ப தற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.
சென்னை ஈஞ்சம் பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற் கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசி வருகிறார்.
வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந் தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சி யமைப்போம் என உறுதி அளித்தனர்.
தனது பேச்சின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டிய அமித் ஷா விருந்தினருக்காக யார் காத்திருக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
தமிழகத்துக்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப் பாளர்களே..!
தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள். 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது.
பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ் நாட்டில் இருந்து பொன் ராதா கிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி.
மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கப் பட்டுள்ளது. தமிழத்துக்கு ஸ்மார் சிட்டி திட்டத்துக்கு 820 கோடி ரூபாயும், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு 1500 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கி யுள்ளது.
நீர்ப்பாசன திட்டம், சென்னை மெட்ரோ, மோனோ ரயில் திட்டங் களுக்கும் மத்திய அரசு நிதி அளித்துள்ளது.
வறட்சிக்காக 1750 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. வர்தா புயல் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளது. மத்தியில் கடந்த 70 ஆண்டு களாக எந்த அரசும் செய்யாத சாதனையை பா.ஜ.க செய்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா
தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப் பெயர்த்து வருகிறார்.
Thanks for Your Comments