இந்த கொடுமைய எங்க போயி சொல்றது? கள்ளக்காதல் என்றாலே தனக்கு யார் இடைஞ்சலாக வந்தாலும் 
குடும்பத்தையே சீரழித்த ஒரு கள்ளக்காதல்
அவர்களை தீர்த்து கட்டி விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போல. அது பெற்ற பிள்ளைகளே ஆனாலும். 

இப்படி ஒரேயடியாக பிள்ளைகளின் உயிரை பறித்து விடுவதை கூட ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு விடலாம். 

ஆனால் கள்ளக் காதலுக்காக பிள்ளைகளின் வாழ்வை சிதைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியாது. 

அது போன்ற ஒரு சம்பவம் தான் விழுப்புரம் மாவட்டத் திலும் நடந்துள்ளது. விழுப்புரம் அடுத்துள்ளது தெலி கிராமம். 

இங்கு கணவன் - மனைவி அவர்களு க்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தை களுடன் ஒரு குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. 

திடீரென குடும்பத்தில் அந்த பெண்ணின் ரூபத்தில் புயல் வீச தொடங்கியது. 
அந்த பெண்ணு க்கும், விழுப்புரம் அடுத்துள்ள வளவனூர் பகுதியில் வசித்து வரும் தணிகைவேல் என்பவரு க்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. 

இந்த தணிகை வேல் ஒரு பட்டதாரி ஆசிரியராம்.

கள்ளக்காதலனுடன் குடித்தனம்

மனைவியின் கள்ளக் காதலை கண்ட கணவர், அதிர்ச்சி யடைந்து அவரை வெறுத்தே விட்டார். 

இதனால் மூத்த மகனை மட்டும் தன்னுடன் அழைத்து கொண்டு தனியாக பிரிந்தும் சென்று போய் விட்டார். 

கணவர் இப்படி குடும்பத்தை விட்டு போய் விட்டாரே என்று துளியும் வருத்தமோ, 

கவலையோ படாத அந்த பெண்ணோ, 2-வது மகன் மற்றும் 3-வது மகளை அழைத்து கொண்டு, 

கள்ளக் காதலன் தணிகை வேலுவுடன் வளவனூ ருக்கே போய் அங்கேயே தங்கி குடும்பம் நடத்த துவங்கி விட்டார். 

இதில் 3-வது மகளுக்கு 4 வயது தான் ஆகிறது.

தாயின் பயங்கரம்
இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி 4 வயது மகளுக்கு திடீரென்று உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. 

அதனால் ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு அந்த சிறுமியை தணிகை வேல் அழைத்து சென்றார். 

அப்போது, சிறுமியின் உடலை பரிசோதித்த டாக்டர், சில சந்தேகங்களை கேட்டார். 

ஆனால் அதற்கு தணிகை வேல் முழுப்பலான பதிலையே தந்துள்ளார். 

இதனால் சந்தேகம் மேலும் பலப்படவே, வளவனூர் போலீசாரிடம் டாக்டர் விஷயத்தை கூறியுள்ளார். 

அதனை யடுத்து போலீசார் ஆசிரியர் தணிகை வேலுவிடம் விசாரணை மேற் கொண்டதில், 

அந்த 4 வயது சிறுமியை தணிகைவேல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரிய வந்தது. 

இதைவிட பயங்கரம், தணிகை வேலுவின் இந்த செயலுக்கு சிறுமியின் தாயும் உடந்தை யாக இருந்திருக் கிறார் என்பதும் வெளிப் பட்டது.

அரசு காப்பகத்தில் குழந்தைகள்

இதை யடுத்து, சிறுமியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தாய் மற்றும் தணிகை வேல் மீது போக்சா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. 

தணிகை வேல் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 
தாயும் விரைவில் சிறை போக வுள்ளார். சிறுமிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

சிகிச்சைக்கு பின்னர் இரண்டு குழந்தை களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருமணங்களின் பலன் என்ன?

நாட்டில் கள்ளக் காதலை தடுத்து நிறுத்த வழி தெரிய வில்லை. கள்ளக் காதலுக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், 
இது போன்ற அவல நிலைக்கு காரணம் அவரவர் மனமே. அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாய் தினம் தினம் ஆயிரமாயிரம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. 

இப்போது அது பிஞ்சுகளையும் தாக்கி வருகிறது. பெரும் பாலான கள்ளக் காதல்கள் ஆபாசம், 

அசிங்கம், சமுதாய சீர்கேடு என்பன வற்றையும் தாண்டி வன்முறை யிலேயே சென்று முடிவடை கிறது. 

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் இந்த கள்ளக் காதலுக்கும் ஒரே வழி. 

இல்லா விட்டால் ஆணும்-பெண்ணும் திருமணம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.