பேராசிரியர் பாலியல் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு !

0
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கை விரைவு நீதி மன்றத்துக்கு மாற்றவும், விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
பேராசிரியர் பாலியல் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு !
இந்த வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது. கல்லூரி மாணவி களுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி போராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். 

இவர்களின் ஜாமீன் மனு அருப்புக் கோட்டை நீதி மன்றத்தில் பலமுறை தள்ளுபடி செய்யப் பட்டது. இதையடுத்து கருப்புசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். 

அதில், மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (வியாழக் கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவிக்கும் கருப்ப சாமிக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங் களையும், 

இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந் ததற்கான ஆதாரங் களையும் சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப் பட்டன. அவருக்கு ஜாமீன் வழங்கவும் சிபிசிஐடி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான குற்றமாகும். இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். இதனால் இந்த வழக்கை செப்டம்பர் 24-க்குள் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். செப்டம்பர் 10-ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். 

பின்னர் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும். அதுவரை வழக்கில் தொடர்புடைய வர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings