சூளைமேடு காவல் நிலையத்தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநர் வாக்கி டாக்கியை ஒப்படைக்க வில்லை. கேட்டதற்கு காணவில்லை என கூறி யுள்ளார்.
சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் ஜிப்சி ரோந்து வாகனத்தில் பொறுப்பு ஓட்டுநராக வீரவேல் என்கிற தலைமை காவலர் பணியில் இருந்தார். நேற்றிரவு இவருக்கு ரோந்துப்பணி ஒதுக்கப் பட்டது.
பொதுவாக ரோந்துப் பணிக்கு செல்லும் முன்னர் டூட்டியில் இணைந்த வுடன் போலீஸார் கையோப்பமிட்டு அவர்களுக் கான வாக்கி டாக்கி கருவியை பெற்றுக் கொள்வர்.
அதேபோல் வீரவேல் தனக்கான வாக்கி டாக்கி கருவியை பெற்றுக்கொண்டு ஜிப்ஸி வண்டியுடன் சென்றார்.
இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை ரோந்துப்பணியில் இருந்தவர் பின்னர் ஸ்டேஷனுக்கு திரும்பிய பின்னர் தன்னிடம் அளிக்கப்பட்ட வாக்கி டாக்கி கருவியை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் அவர் ஒப்படைக்க வில்லை. அதற்கான பொறுப்பு காவலர் வாக்கி டாக்கி எங்கே என்று கேட்ட போது காணாமல் போய் விட்டது என்று கூறி யுள்ளார்.
வாக்கி டாக்கி ஜிப்சி வாகனத்தில் இருந்தது, திடீரென காணவில்லை என்று கூறியுள்ளார்.
வாக்கி டாக்கி எப்போதும் காவலர் கையில் இருக்கும், அப்படி இருக்கும் போது எப்படி காணாமல் போனது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இதேப் போல 2015-ல் தேனாம்பேட்டை போக்கு வரத்து காவல் அலுவலக த்தில் வைக்கப் பட்டிருந்த 7 வாக்கி - டாக்கிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது வரை அந்த வாக்கி டாக்கிகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை, குற்றவாளி களும் சிக்க வில்லை.
இது நடந்து சில மாதங்களில் அக்டோபர் 2015-ல் தேனாம்பேட்டை சிறப்பு எஸ்ஐ குளஞ்சியப்பன் கொண்டுச் சென்ற வாக்கி டாக்கி ஜிப்சி வாகனத்தி லிருந்து காணாமல் போனது.
இதே போல் டிஜிபி அலுவலகத்தில் கடந்த மே மாதம் 17-ம் தேதி வாக்கி - டாக்கி மாயமானது.
Thanks for Your Comments