ஒடிசா, உத்தரப் பிரதேசம் என சில மாநிலங்களில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத் தால் சடலத்துடன் அலைந்த உறவுகள் குறித்த செய்திகள் அண்மையில் வெளியாகின.
ஆனால், இன்னமும் ஆங்காங்கே மருத்துவ சேவை பற்றக்குறை தொடர்பான செய்திகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோகன்கர் மாவட்டத்திலும் இது போன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் மோகன்கரைச் சேர்ந்தவர் குன்வர் பாய். இவர் பாம்பு தீண்டியதால் இறந்தார். இவரது மறைவு குறித்து குடும்பத்தினர் மோகன்கர் மருத்துவ மனைக்கு தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவ மனைக்கு சடலத்தைக் கொண்டு வர மருத்துவ மனை தரப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அமரர் ஊர்தி அனுப்ப மறுத்து விட்டது.
இதனால், குன்வரின் மகன் தனது தாயின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதை ஊர்காரர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பகிர மோகன்கர் மருத்துவ மனைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்து வருவதாக மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.கே. அஹிர்வார் கூறி யிருக்கிறார்.
Thanks for Your Comments