ரஷ்யாவில் இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி?

0
மழை நீருக்கும் வரி விதித்துள்ளது ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ரஷ்யாவில் இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி?
ரஷ்யாவில் உள்ள Perm எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் களுக்கு மின்சாரம், குடிநீர் போன்று மாதாந்திர பயன்பாட்டு கட்டணம் மொத்தமாக வசூலிக்கும் முறை அமலில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் கழிவுநீர் கட்டணம் என்ற பெயரில் புதிய கட்டணம் ஒன்று மாதாந்திர கட்டணத்தில் சேர்க்கப் பட்டிருந்ததைக் கண்ட குடியிருப்பு வாசிகள் குழப்ப மடைந்துள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய போது இது மழைக்காலம் என்பதால் மொட்டை மாடியி லிருந்து வழிந்தோடி கழிவு நீர் தொட்டியில் மழை நீர் கலந்ததால் 
ரஷ்யாவில் இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி?
அதற்குரிய கட்டணம் மழை வரியாக வசூல் செய்யப் பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் மழை நீருக்கும் வரியா என்று ஆதங்கம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சேகரிக்கப் படும் கழிவுநீர் பைப்புகள் மூலம் கழிவுநீர் வடிகால் வழியாக செல்வதை தாங்கள் அறிவோம். 

ஆனால் மொட்டை மாடியில் சேகரிக்கப் படும் மழைநீர், தனியாக பைப்புகள் மூலமாக பூமிக்குள் செலுத்தப் படுவதாகவே அறிகிறோம்.

இது தொடர்பாக மாதாந்திர பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத் திடம் விளக்கம் கேட்ட போது இது முற்றிலும் சட்டப் பூர்வமாகவே வசூலிக்கப் படுகிறது என்றும் கழிவுநீர் வடிகாலில் செல்லும் கழிவுநீர் 

மற்றும் மழை நீர் ஆகியவை இரண்டுமே சமமாகவே கருதப்படும் என்றும் கூறி யுள்ளனர்.
ரஷ்யாவில் இந்த நகரத்தில் மழை நீருக்கும் வரி?
வேறு வழியின்றி இதனை ஏற்றுக் கொண்ட குடியிருப்பு வாசிகள் இது மழைக் காலத்திற்கு மட்டும் வசூலிக்கப்படுமா அல்லது வருடம் முழுவதும் வசூல் செய்யப் படுமா என்று மேலும் குழப்ப மடைந்துள்ளனர்.

மழை நீருக்காக வரி வசூல் செய்யப்படும் சம்பவம் நகர வாசிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings