கொட்டும் மழையில் முத்த மிட்ட காதல் ஜோடி - நடந்தது என்ன?

0
வங்க தேசத்தில் கொட்டும் மழையில் முத்த மிட்டு கொண்ட காதல் ஜோடியை படம் எடுத்த போட்டோ கிராபருக்கு அடி, உதை விழுந்தது. வேலையும் பறிபோனது.
கொட்டும் மழையில் முத்த மிட்ட காதல் ஜோடி - நடந்தது என்ன?
சர்ச்சை பல்கலைகழகம்

வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள பல்கலைகழகம் சர்ச்சைக்கு பெயர் போனது.

சில மாதங்களாக போராட்டங் களும், வன்முறை சம்பங்களும் அதிகளவில் நடந்துள்ளன.

கைகளை கோர்த்து நின்ற மாணவர்கள் மீது தாக்குதலும் நடத்தப் பட்டது.

தாகாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஜிபான் அஹமது. உள்ளூர் பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.

சில நாட்களுக்கு முன் பல்கலைக் கழகத்திற்கு சென்ற ஜிபான் அஹமது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களை படம் எடுக்க முயன்றார்.
அப்போது கனமழை பெய்தது. பல்கலை வளாகத்தில் இருந்த ஒரு காதல் ஜோடி, கொட்டும் மழையை பொருட் படுத்தாமல் முத்தமிட்டு கொண்டனர்.

இதை பார்த்த ஜிபான் அஹமது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அந்த காட்சியை படம் எடுத்து விட்டார்.

ஆனால், படத்தை வெளியிட, அவர் பணியாற்றும் பத்திரிகை யின் ஆசிரியர் மறுத்து விட்டார். இந்த படம் சர்ச்சை களை ஏற்படுத்தும் என்று அவர் கூறிவிட்டார்.

பேஸ்புக்கில் வெளியானது

இதனால், ஜிபான் அஹமது அந்த படத்தை பேஸ்புக்கில் வெளி யிட்டார். அந்த படம் வேகமாக பரவியது.

சுயநல மில்லாத காதல் என்று கூறி பலரும் அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், உள்ளூர் கலாச்சார பாதுகாவலர்கள் என்று கூறி கொள்பவர்கள், இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'காதலர் களுக்கு தற்போது துணிச்சல் வந்து விட்டது. முன்பெல்லாம் இது போன்ற விஷயங்கள் மறைவில் நடக்கும்.

இப்போது வெட்ட வெளிச்சமாக நடத்து கின்றனர்' என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்த நாள் ஜிபான் அஹமதை, சக போட்டோ கிராபர்கள் தாக்கி யுள்ளனர்.

அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளூர் பத்திரிகை நிர்வாகம் உத்தரவு பிறப்பித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings