அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த ஷோபியாவை போலீஸார் கைது செய்தனர். 
புது கார் புது பங்களா
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளூந்தூரைச் சேர்ந்தவர் இளந்தீபன் (33). இவர் இந்திய உணவு கழகத்தில் பணிக்காக முயற்சித்து கொண்டிருந்தார். 

இதை அறிந்த சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா (32) என்பவர் தான் இந்திய உணவு கழகத்தில் 

கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார். 
வெயிலைச் சமாளிக்க உங்களுக்காகவே சில டிப்ஸ் 
மேலும் ரூ. 5 லட்சம் கொடுத்தால் போதும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஷோபியா கூறினார். 

இதை உண்மை என்று நம்பிய இளந்தீபன் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையால் ரூ. 3 லட்சத்துக்கு 50 ஆயிரத்தை ஷோபியா விடம் கொடுத்தார். 

பணத்தை பெற்றுக் கொண்ட ஒரு வாரத்தில் பணி நியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்தார். 

ஆணை ஆணை அந்த ஆணையுடன் இளந்தீபன் சம்பந்தப்பட்ட அலுவலக த்தை அணுகிய போது தான் அது போலியானது என்று இளந்தீபனுக்கு தெரிய வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த இளந்தீபன் சிதம்பரம் போலீஸில் புகார் அளித்தார். 
புது கார் புது பங்களா கோடிக்கணக்கில் சுருட்டல் ஷோபியா
மோசடி மோசடி இது தொடர்பாக போலீஸார் விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்துள்ளன. 

ஷோபியாவும் அவரது தாய் ஆரோக்கிய செல்வியும் (50) பல இளைஞர் களிடம் இருந்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. 

தாயும் கைது தாயும் கைது இந்நிலையில் கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த 

ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரிய வந்தது. 

இதை யடுத்து ஆரோக்கிய செல்வியும், ரவிச்சந்திரனும் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப் பட்டனர். ஷோபியா தலை மறைவானார். 

74 பேரிடம் மோசடி 74 பேரிடம் மோசடி இதற்காக அமைக்கப் பட்ட தனிப்படை போலீஸார் கடலூர் செம்மண்டல த்தில் ஒரு வீட்டில் பதுங்கி யிருந்த ஷோபியாவை கைது செய்தனர். 
அப்போது விசாரணை பல தகவல்கள் கிடைத்தன. ஷோபியா மொத்தம் 74 பேரிடம் இருந்து ரூ.3 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளது தெரியு வந்தது. 
ஆட்களை வைத்து மிரட்டுவது... ஆட்களை வைத்து மிரட்டுவது... பணம் கொடுப்பவர் களுக்கு பணி நியமன ஆணையை தருவதும் 

போலி ஆணை என தெரிந்ததும் பணம் கேட்போரை அடியாட்களை வைத்து மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். 

பெற்ற பணத்தில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். புதிய கார், புதிய இரு வீடுகளை கட்டி வருகிறார்.