கூகுளுக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் !

0
முன்னணி இணையதள தேடுபொறியான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 4.3 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதித்தது. 
கூகுளுக்கு ரூ.34 ஆயிரம் கோடி அபராதம் !
பிரசல்ஸ் நகரில், ஐரோப்பிய கூட்டமைப்பின் போட்டி ஆணையர் மார்கரெட் வெஸ்டகர் இதை அறிவித்தார்.

கூகுள் நிறுவனம், தனது தேடுபொறியான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப் படுத்தும் வகையில், 

ஆன்ட்ராய்டு மொபைல் போன் சிஸ்டத்தை தவறாக பயன் படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

சாம்சங், ஹுவெய் ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களில் தனது கூகுள், கூகுள் குரோம்களை முன் கூட்டியே நிறுவச் செய்து, 

தனது போட்டி யாளர்களை ஒடுக்கிய தாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக நடை பெற்ற விசாரணையின் முடிவில், அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
இது பற்றி ‘கூகுள்’ தலைவர் சுந்தர் பிச்சையிடம் மார்கரெட் வெஸ்டகர் முன் கூட்டியே தெரிவித்துள்ளார். அபராதத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ‘கூகுள்’ அறிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings