ஒரே குடும்பத்தில் 11 பேர் மற்றும் நாயும் உயிரிழந்தது !

0
டெல்லியில் புராரி பகுதியில் கடந்த 1-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில், அவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயும் நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது.
ஒரே குடும்பத்தில் 11 பேர் மற்றும் நாயும் உயிரிழந்தது !
டெல்லியின் வடக்குப் பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. 

இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு இறந்திருந்தனர்.

வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி (வயது 77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கிய வாறு சடலமாக மீட்கப் பட்டனர். 

இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா (வயது 57). பவனேஷ் மனைவி சவிதா (வயது 48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15), 

லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). டெல்லி போலீஸார் தீவிர விசாரணையில் யாரும் இந்த 11 பேரைக் கொலை செய்ய வில்லை.
தற்கொலை செய்திருக் கிறார்கள் என்று தெரிவித்தனர். அதிலும், லலித் பாட்டியா என்பவர் தீவிரமான மூடநம்பிக்கை களைப் பின்பற்று பவராகவும் பூஜைகள் செய்ப வராகவும் இருந்தார் என போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், லலித் பாட்டியா குடும்பத்தினர் இந்தியன் பிட்புல் வகை கலப்பின நாயை வளர்த்து வந்தனர். 

இந்த 11 பேரும் தற்கொலை செய்யும் அன்று இரவு 11 மணிக்கு நாயை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்று விட்டு மாடியில் கட்டி விட்டு தற்கொலை செய்தனர்.

இந்தக் குடும்பத்தினர் தற்கொலைக்குப் பின் நாயை மீட்ட விலங்குகள் நல உரிமை யாளர்கள் நொய்டாவில் உள்ள பண்ணையில் வளர்த்து வந்தனர். 

தொடக்கத்தில் சாப்பிடாமல் முரண்டு பிடித்த இந்த நாய் அடுத்த சில நாட்களில் அங்குள்ள ஊழியர்களிடம் நன்றாகப் பழகியது. 
இந்நிலையில், நேற்று நண்பகலில் உணவு சாப்பிட்டு மாலையில் நடைப் பயிற்சிக்கு நாயை அழைத்துச் சென்ற போது நாய் மாரடைப்பால் உயிரிழந்த துள்ளதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நொய்டாவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சய் மொகாபத்ரா கூறுகையில், 

டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில், அவர்கள் வளர்த்த டாமி என்ற நாய் மட்டுமே எஞ்சி இருந்தது. 

அவர்கள் தற்கொலை செய்து கொண்ட பின், நாங்கள் அந்த நாயை வீட்டில் இருந்து மீட்டோம். முதலில் எங்களுடன் பழகாமல், ஆவேசமாக இருந்தது, இரு நாட்களாக நாங்கள் வழங்கிய உணவுகளைச் சாப்பிட வில்லை. 
ஒரே குடும்பத்தில் 11 பேர் மற்றும் நாயும் உயிரிழந்தது !
மருத்துவர் களை அழைத்துப் பரிசோதித்த போது, நாய்க்குக் காய்ச்சல் இருந்தது. அதன் பின் அளிக்கப்பட்ட சிகிச்சையால் நாய் குணமடைந்தது.

எங்கள் காப்பக ஊழியர் களுடன் சகஜமாகப் பழகி, நடைப் பயிற்சிக்கு சென்று வந்தது. இந்நிலை யில், நேற்று மாலை 4 மணி அளவில் நாயை அழைத்துக் கொண்டு நடை பயிற்சிக்குச சென்று விட்டு ஊழியர்கள் திரும்பினர். 

அப்போது வாயில் கதவருகே வந்தபோது, நாய் திடீரென சுருண்டு விழுந்து படுத்து விட்டது. உடனடியாக மருத்துவர் களை அழைத்து வந்து பரிசோதித்த போது, நாய் மரடைப்பால் இறந்து விட்டது என்று தெரிவித்தனர். 

இதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதன்பின் நாய் டாமி இறந்தது குறித்து நொய்டா போலீஸாருக்கு தகவல் அளித்தோம். 

தற்கொலை செய்து இறந்த நாராயண் தேவியின் பேரனும், பெங்களூரில் வசிக்கும் பிரசாந்த் சிங் சுந்தா வத்துக்கும் தகவல் அளித்தோம்.
கடந்த சில நாட்களுக்கு முன் செல்போனில் என்னிடம் பேசிய பிரசாந்த் சிங், நாங்கள் 9 ஆண்டுகளாகச் செய்ய முடியாததை நீங்கள் சில நாட்களில் செய்து விட்டீர்கள். நாயை நன்றாகப் பழக்கி விட்டீர்கள் என்று பாராட்டினார். 

நாயின் உடல்நலத்தை விசாரித்தார். வீடியோ கால் மூலம் நாய் டாமியை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இவ்வாறு மொகாபத்ரா தெரிவித்தார்.

பிரசாந்த் சிங் சுங்காவத்திடம் தொலைபேசியில் கேட்ட போது, அவர் கூறுகையில், த்தனை ஆண்டுகளாக நாங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழவில்லை. 

புராரி வீட்டுக்கு எப்போது சென்றாலும், நாய் டாமி மாடியில் கட்டப்பட்டு இருக்கும். என்னுடைய மூத்த சகோதரர் பவனேஷுடன் நாய் டாமிநெருங்கி பழகியது. 
நாய் நன்றாகப் பழகி விட்டால், நான் பெங்களூரு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தேன். பொதுவாக நாய் தன்னை வளர்த்தவர்கள் இல்லை யென்றால், நீண்ட நாள் உயிருடன் இருக்காது. 

பாசத்துக்கு அடிமையான வளர்ப்பு பிராணிகளுக்கு இது போன்று மாரடைப்பு வருவது அரிதானது எனத் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings