வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பணவீக்கம்... 10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் !

0
வெனிசூலா வில் நிலவும் மோசமான பண வீக்கத்தை கட்டுப் படுத்த, அந்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 
வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பணவீக்கம்... 10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் !
அதிக மதிப்பிலான பணங்களை செல்லாது என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிக்க இருக்கிறார்.

வெனிசூலா தற்போது மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. அந்நாட்டின் பணவீக்கம் தற்போது 10 லட்சம் சதவிகிதத்தை தாண்டி இருக்கிறது. 

உலகிலேயே தற்போது அதிக பண வீக்கம் கொண்ட நாடு வெனிசூலா தான்.

இதனால் அந்த நாட்டு மக்கள் எவ்வளவு அதிகம் சம்பாதித்தாலும் எதையும் வாங்க முடியாத நிலைக்கு சென்று இருக்கிறார்கள். பொருட்களின் விலை உச்சத்தை அடைந்து இருக்கிறது.

காரணம் என்ன
அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் இருந்தவரை நாட்டின் பொருளாதாரம் சரியாகவே இருந்தது. 

அவர் இறந்த பின், நிகோலஸ் மதுரோ பதவியேற்றார். ஆனால் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் வர்த்தகம் இழப்பை சந்தித்தது. 

96 சதவிகித நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. இதனால் பண இழப்பை கட்டுப் படுத்த, அதிக மதிப்பில் 10,000 ரூபாய் வரை கூட அந்நாட்டில் பணம் புழக்கத்திற்கு வந்தது.

விலை என்ன விற்கிறது

இதனால் பண வீக்கம் அதிகம் ஆனது. எந்த அளவிற்கு அதிகமானது என்றால் பொலிவர்ஸ் எனப்படும் வெனிசூலா பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ஒரு பர்கர் 10 லட்சம் பொலிவருக்கு விற்றது. ஒரு கிலோ தக்காளி 2 லட்சம் பொலிவர். இதனால் 100, 1000 பொலிவர்கள் மதிப்பு இழந்தது. மக்கள் இதற்காக பண்டமாற்று முறையில் கூட ஈடுபட்டார்கள்.

மக்கள் அவதி

இந்த நிலையில் இது குறித்து ஐநா வித்தியாச மான அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. 
வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பணவீக்கம்... 10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் !
பெரும் பாலான நபர்கள் மூன்று வேலைகளை பார்க்கிறார்கள். 1 லட்சம் வரை சம்பாதிக் கிறார்கள். ஆனால் அவர்களால் பொருள் எதையும் வாங்க முடிய வில்லை. 

இதனால் சராசரியாக அங்கு இருக்கும் எல்லா மக்களின் எடை சுமார் 11 கிலோ குறைந்து இருக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் உணவு இன்றி கஷ்டப் படுகிறார்கள்.

ஆயுத குழுக்கள்

இந்த மோசமான பொருளாதார நிலையை மாற்ற அரசு கஷ்டப்பட்டு வருகிறது.ஏற்கனவே அங்கு மக்கள் தொகை பிரச்சனை இருக்கிறது. 

இதனால் தற்போது அங்கு 100க்கும் அதிகமான சிறு சிறு ஆயுத குழுக்கள் உருவாகி இருக்கிறது. சில ஆயுத குழுக்கள் அரசுக்கு எதிராகவும், சில மக்களுக்கே எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

நடவடிக்கை என்ன
தற்போது இதை தடுக்க அந்நாட்டு அரசு புதிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. அதன்படி அங்கு புழக்கத்தில் உள்ள, அதிக மதிப்புள்ள பணங்களை செல்லாது என்று அறிவிக்க போகிறது. 

1 லட்சம் பொலிவர், 10 ஆயிரம் பொலிவர் பணத்தை செல்லாது என்று அறிவிக்க இருக்கிறது. இதன் மூலம் மீண்டும் பழைய சிறிய மதிப்பிலான பணம் அதிக மதிப்பை பெறும் என்று நம்பப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings