மதத்தை காப்பாற்ற கௌரி லங்கேஷை கொன்றேன் - கொலையாளி !

0
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்துத்துவ சார்புடைய நபர்களால் பரிதாப கரமாக சுட்டுக் கொல்லப் பட்டார். 
மதத்தை காப்பாற்ற கௌரி லங்கேஷை கொன்றேன் - கொலையாளி !
தொடர்ச்சி யாக அவர் மத்திய பாஜக அரசுக்கு - அதன் சனநாயக செயற் பாடுகளு க்கு எதிராக எழுதி வந்ததன் காரணத்தி னாலேயே கொல்லப் பட்டதாக அப்போது சில தகவல்கள் வெளியாகின.

இது குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவினர், ஏற்கனவே மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். 

அவர் கொடுத்த தகவலின் பேரில் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி 
சுஜீத்குமார் என்கிற பிரவீன், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகிய 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலும், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருந்த விஜயாப்புரா மாவட்டம் 

சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்துள்ளனர். 
அவர் இந்து அமைப்பை சேர்ந்தவர் என்று தெரிந்தது. கைதான பரசுராம் வாக்மோரை 14 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கவுரி லங்கேசை துப்பாக்கி யால் சுட்டுக் கொன்றது நான் தான் என்பதை போலீசாரிடம் பரசுராம் வாக்மோர் ஒப்புக் கொண் டுள்ளார்.

விசாரணையில், “என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” என பரசுராம் வாக்மோர் விசாரணை அதிகாரி களிடம் கூறியதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மதத்தை காப்பாற்ற ஒருவரை கொல்ல வேண்டும் என்று எனக்கு 2017 மே மாதம் தகவல் வந்தது. 

இதனை யடுத்து எனக்கு கோபம் ஏற்பட்டது. நான் யாரை கொலை செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. 

பெண்ணை கொன்று இருக்கக்கூடாது என்பதை இப்போது நான் உணர்கிறேன் என தெரிவித்து ள்ளானாம் பரசுராம் வாக்மோர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)