மெரினாவில் நினைவையாவது ஏந்துவார்கள்... கமல் கருத்து !

0
ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவையாவது ஏந்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி யுள்ளார்.
மெரினாவில் நினைவையாவது ஏந்துவார்கள்... கமல் கருத்து !

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக் காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்து வதற்காக 


சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள தாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப் பட்ட இடங்களிலும் 

உள்ளரங் குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொது மக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. 

எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். 


மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் கமல் ஹாசனிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்குப் பதிலளித்த அவர், அது காவல் துறையின் எச்சரிக்கை. ஏக்கம், உறவு உள்ளவர்கள் நினைவை யாவது ஏந்துவார்கள். 

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஜனநாயகம் வென்றுள்ளது என்று கமல் பதிலளித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)