நாட்டு படகுகளில் கச்சதீவுக்கு செல்ல அனுமதி... உயர்நீதி மன்றம் !

0
கச்சதீவு திருவிழா விற்கு, இராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பு அம்சங்கள், 
நாட்டு படகுகளில் கச்சதீவுக்கு செல்ல அனுமதி... உயர்நீதி மன்றம் !
விதி முறைகளுக் குட்பட்டு அரசு தரப்பில் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.

இராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியிலுள்ள சட்டத்தரணி பிரின்சோ ரைமண்ட்,  தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை யின் பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது;

கச்சதீவில் 1913இல் புனித அந்தோனியார் ஆலயம் அமைக்கப் பட்டது. 1974ல் கச்சத் தீவை இலங்கை அரசிடம், இந்திய அரசு சில ஒப்பந்தங்கள் அடிப்படை யில் கொடுத்தது. 

அதன்படி இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது தீவில் வலைகளை உலர்த்தலாம். திருவிழா கொண்டாடலாம். 

1974 க்கு பின் ஓலைக்குடா மக்கள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி யுடன் திருவிழாவிற்கு சென்று வருகின்றனர்.
அங்கு இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள மீனவ கிராமங் களைச் சேர்ந்தவர்கள் நாட்டுப் படகுகளில் சென்று வருவது வழக்கம்.

இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடக்க வில்லை. கச்சதீவில் இன்று திருவிழா நடக்கிறது. 

மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர அனுமதி கோரி இராமநாதபுரம் அரச அதிபரிடம் (கலெக்டரிடம்) மனு அளித்தோம்.

அது பாது காப்பற்றது எனக்கூறி நிராகரித்தார். அந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும். 

இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கச்சதீவு திருவிழா விற்கு  மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்று வர அனுமதிக்க உத்தர விட வேண்டும். 

இவ்வாறு பிரின்சோ ரைமண்ட் மனு தாக்கல் செய்திருந்தார். இது போல் மேலும் சிலர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர். ஹேமலதா அமர்வு உத்தரவு: தற்போது குறுகிய கால அவகாசமே உள்ளதால், 

நடப்பு ஆண்டு மனுதாரர்கள் கோரும் நிவாரணம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் எழ வில்லை.

அடுத்த ஆண்டு முதல் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கச்சதீவு திருவிழா விற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்று வர பாதுகாப்பு அம்சங்கள், நிபந்தனைகள், 

விதி முறைகளுக்குட் பட்டு பரிசீலித்து, அரசுத் தரப்பில் அனுமதிக்க வேண்டும் என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings