தண்டுவடம் பாதித்த பாம்புக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் !

0
தண்டு வடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு, மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி யுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றத்தை அடுத்த தனக்கன் குளம் முல்லை நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, மே 19-ம் தேதி, சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றிருக் கிறது.

ஆரம்பத்தில் இதைப் பார்த்து பயந்து ஓடியவர்கள், பிறகு பாம்பு ஏதோ ஒருவித உடல்நலக் குறை பாட்டில் இருக்கிறது என நினைத்து, 
அருகிலுள்ள 'ஊர்வனம்' என்னும் அமைப்பினரு க்குத் தகவல் கொடுக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் பாம்பை பிடித்துப் பார்த்த போது, முதுகுத் தண்டு உடைந்ததால் பாம்பு சிரமப்படுவது தெரிய வந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் வனத்துறை யினரின் ஒப்புதலுடன் , தல்லா குளத்தில் உள்ள 
ஒரு கால்நடை மருத்துவ மனைக்குக் கண்ணாடி விரியன் பாம்பை கொண்டு சென்றுள்ளனர். அங்கு, பாம்புக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், முதுகுத் தண்டு அடிபட்டு எலும்பு விலகி யிருப்பது தெரிந்திருக்கிறது. 

பாம்புக்கு உயர் தர சிகிச்சை அளிப்ப தற்காக, ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனத்துறை விலங்குகள் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பாம்பை பரிசோதித்த டாக்டர் அசோகன், பாம்புக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது. 

மேலும், இங்கு உரிய வசதி இல்லாததால் சேலத்துக்குக் கொண்டு சென்று சிகிச்சை யளிகலாம் என அங்குள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அங்கு மயக்க மருந்து கொடுத்து, கிட்டத் தட்ட 4 மணி நேரம் கண்ணாடி விரியனுக்கு ஆபரேஷன் நடைபெற்று, 
உடைந்து போன தண்டு வடத்தை இணைத்து வைத்து சிகிச்சை யளித்துள்ளனர்.

இது குறித்து சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனக் கால் நடை மருத்துவ அலுவலர் அசோகனிடம் பேசினோம். இந்த கண்ணாடி விரியனை யாரோ பெரிய கட்டையால் தாக்கி யிருக்காங்க. 
15 நாளைக்கு முன்னாடி இது நடந்தி ருக்கலாம். அடிபட்ட இடத்தில் உள் பக்கமாக செஃப்டிக் ஆகியிருந்தது.  தண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்டி ருக்கிறது. 

அதனால், 10 நாள்களாகச் சாப்பிட முடியாமல் இருந்தி ருக்கிறது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் வைத்து, டாக்டர் அமர் நாத்துடன் சேர்ந்து சிறப்பாக சிகிச்சை யளித்துள்ளோம்.
குறைந்த பட்சம் ஒருவார காலமாவது ஓய்வு எடுக்க வேண்டும். அதன் பிறகு, பாம்பை வனத்துறை யினரிடம் ஒப்படைத்து, காட்டில் விட்டு விடுவோம்" என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings