காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவு அரசே செய்ய வேண்டும்... உயர் நீதிமன்றம் !

0
தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத் தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்களின்
காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவு அரசே செய்ய வேண்டும்... உயர் நீதிமன்றம் !
மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளை வெள்ளிக் கிழமை உத்தர விட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்திய தற்கு எதிராக வழக்குரைஞர்கள் முத்துக் குமார், ரஜினி, கதிரேசன், சையது அப்துல் காதர், 

கே.கே.ரமேஷ், எழிலரசு, அழகர்சாமி உள்ளிட்டோர் சார்பில் 10க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தன. 
 
அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்குரை ஞர்கள் வாதிடு கையில், தூத்துக் குடியில் 144 தடை உத்தரவு 
பிறப்பிக்கப் பட்டுள்ள தால் பொது மக்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோரை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப் படுகிறது. 

இணைய வசதி, மின் சேவை, போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப் பட்டுள்ள தால் மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் உள்ளனர் என்றனர்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தூத்துக் குடியில் கலவரம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங் களிலும் இணைய சேவைகளை ரத்து செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்து அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தூத்துக் குடியில் நடைபெற்ற போராட்ட த்துக்கு திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிகம் பேர் பங்கேற்றனர். 

இணைய தளம் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டது. 

தற்போது திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங் களில் மட்டும் இணைய சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.

இதை யடுத்து காயமடைந்த வர்களின் விவரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
அதற்குப் பதிலளித்த அரசு வழக்குரைஞர், கலவரத்தின் போது பொது மக்கள் 72 பேரும், போலீஸார் 72 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த 26 பேருக்கு தலா ரூ.3 லட்சம், குறைந்த காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

காய மடைந்த 53 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் உள்நோயாளி களாக உள்ளனர். 

141 வாகனங்கள் சேதமடைந் துள்ளன. 98 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தூத்துக் குடியில் தற்போது நிலவரம் கட்டுப் பாட்டில் உள்ளது என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தீர்ப்புக்காக மாலைக்கு ஒத்தி வைத்தனர். 

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங் களில் இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பான உத்தரவை நீதிபதிகளிடம் அரசு வழக்குரைஞர் மாலையில் சமர்ப்பித்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தூத்துக் குடியில் சனிக்கிழமை (மே 26) சீராய்வுக் குழுக் கூட்டத்தை கூட்டி 
காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவு அரசே செய்ய வேண்டும்... உயர் நீதிமன்றம் !
நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பாக உரிய முடிவு எடுக்கவும் உத்தர விட்டனர். 

மேலும் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர் களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக உடனடியாக அரசு முடிவு செய்யவும் உத்தர விட்டனர்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை யத்தினர் நேரில் சந்தித்து அவர்களது நிலை குறித்து விசாரிக்க வேண்டும். 

அதில் உயர் சிகிச்சை தேவைப்படுவோரை மதுரையில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்க வேண்டும். 

மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். பாதிக்கப் பட்டவர்களு க்குத் தேவையான சட்ட உதவிகளை சட்டப் பணிகள் ஆணைக் குழு செய்ய வேண்டும். 

மாவட்ட முதன்மை நீதிபதி இதைக் கண்காணித்து ஜூன் 6இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட வற்றை மீண்டும் செயல் பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 

இம்மனுக்கள் குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 

காவல் கண்காணிப் பாளர் ஆகியோர் ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

சிபிஐ விசாரணை கோரும் மனுவுக்கு, சிபிஐ இயக்குநர் பதில் அளிக்கவும் உத்தர விட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings