குதிரைச் சவாரிக்கு ஆசைப்பட்ட இளைஞர் படுகொலை !

0
குதிரைச் சவாரி செய்ததற் காக குஜராத்தில் பட்டியலின இளைஞர் கொல்ல ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி யுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாவ்நகர் எஸ்சி / எஸ்டி பிரிவு காவல் துணை கண்காணிப் பாளர் எம்.எம்.சையத் ஊடகங் களிடம் கூறுகை யில்...

`குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், திம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதிப் ரத்தோட் (21). இவர் சமீபத்தில் குதிரை ஒன்றை வாங்கி யிருக்கிறார். 

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதிப் குதிரை வாங்கியது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத் தினருக்குப் பிடிக்க வில்லை. 
இதனால், குதிரை விற்று விடும்படி கிராம மக்கள் பலமுறை மிரட்டி யுள்ளனர். ஆனால், பிரதிப் கேட்க வில்லை. 

இதனால் ஆத்திர மடைந்த சிலர் பிரதிப்பை கூர்மையான ஆயுதங் களைக் கொண்டு கொலை செய் துள்ளனர். 

இது பற்றி பிரதிப்பின் தந்தை காவல் துறையில் புகாரளித் துள்ளார். அவர் புகாரின் பேரில் அந்தப் பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தோம். 
கொலை நடப்பதற்கு முன்பு பிரதிப் குதிரையில் செல்வது பதிவாகி யுள்ளது. இந்தச் சம்பவ த்தில் மூன்று பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

இந்தச் சம்பவத்தில் மற்றொரு தகவலும் வெளியாகி யுள்ளது. பிரதிப் கொலை நடந்துள்ள திம்பி மற்றும் 

அதன் சுற்றுவட்டார கிராமங் களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குதிரையை வளர்க்கவோ சவாரி செய்யவோ கூடாதாம்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings