வளர்மதிக்கு நடந்த கொடுமை - சமூக ஆர்வலர்கள் !

0
காவிரி மற்றும் கதிரா மங்கலம் பிரச்னைக் காகப் போராடிய வர்களைப் போலீஸார் சித்ரவதை செய்வ தாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. 
வளர்மதிக்கு நடந்த கொடுமை - சமூக ஆர்வலர்கள் !
அதன் தொடர்ச்சி யாகக் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள வளர்மதி, மாணவி குறிஞ்சித்தேன் 

ஆகியோரு க்கு அநீதி இழைக்கப் படுவதாகக் கொதிக் கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மீத்தேன் திட்டத்து க்கு எதிராகப் போராடி வரும், கதிரா மங்கலம் மக்களை சந்திப்பதற் காக கடந்த 7-ம் தேதி, 

பொதுநல மாணவர் எழுச்சி இயக்க த்தைச் சேர்ந்த வளர்மதி, மதுரை சட்டக்கல்லூரி மாணவி குறிஞ்சித்தேன், 

இயற்கை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த மகாலெட்சுமி, வழக்கறிஞர் மனோகரன் மற்றும் பால்சாமி ஆகியோர் சென்றனர். 

அவர்களைத் தஞ்சாவூர் பேருந்து நிலைய த்தில் வைத்து கைது செய்த போலீஸார், கலகத்தைத் தூண்டுதல், பணி செய்ய தடுத்தது, 

கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவு களில் வழக்கு பதிவு செய்த துடன், 3 வயது கைக்குழந்தை யுடன் இருந்த மகாலெட்சுமி யைத் தவிர்த்து மற்றவர் களைச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்.
அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ
நடந்ததை நம்மிடம் விளக்கினார் மகாலெட்சுமி, “மக்களின் வாழ்வுரிமைப் பிரச்னைகளு க்காகப் போராடும் சி.பி.சி.எல், 
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட 24 அமைப்புகள் இணைந்து, 

“இயற்கை பாதுகாப்பு குழு” எனும் கூட்டமைப் பாகச் செயல்பட்டு வருகிறோம். இதன் ஒருங்கிணைப் பாளராக வளர்மதி செயல் பட்டு வருகிறார். 

எங்கள் குழு, சில வாரங் களுக்கு முன்பு, ஸ்டெர்லைட்- க்கு எதிரான போராட்டங் களில் கலந்து கொள்ளச் சென்ற போது, போலீஸார் அனுமதி மறுத்தனர். 

அடுத்து தான் மீத்தேன் திட்டத்து க்கு எதிராக, கதிரா மங்கலத்தில் போராடும் மக்களைச் சந்திக்கத் திட்ட மிட்டோம்.

அதன்படி நாங்கள் கடந்த 7-ம்தேதி காலை திருச்சி வழியாகத் தஞ்சாவூர் சென்றோம். அங்கிருந்து கதிரா மங்கலம் செல்ல பேருந்தில் ஏறினோம். 

அங்கு வந்த உளவுத்துறை போலீஸார் மற்றும் பெண் காவலர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து, எங்களைக் கைது செய்தனர். 

இது ஜனநாயக நாடு, நாங்கள் பேருந்தில் பயணம் செய்யக் கூடாதா எனக் கேள்வி எழுப்பினோம். 

அதைக் காதில் வாங்காத போலீஸார், எங்களை வலுக்கட்டாய மாக இழுத்து ஆட்டோ வில் ஏற்றினர். 
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் சாப்பிடாதீங்க !
அப்போது வளர்மதி யின் உடைகள் கிழிந்தது. உடலில் காயங்கள், நகக் கீறல்கள் ஏற்பட்டது. 

கைது செய்யப் பட்ட எங்களை, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து இரவு 10 மணி வரை விசாரணை நடத்தினர். 
டி.எஸ்.பி தமிழ்ச் செல்வன் தலைமை யிலான போலீஸார் 6 முறை என்னிடம் தனியாக விசாரணை நடத்தி, 

கைக்குழந்தை யோடு இருக்கும் உங்களை மட்டும் காவல் நிலைய ஜாமீனில் விடுகிறோம் என்றார்கள். 

ஆனால் நானோ, நாங்கள் அடுத்த தலை முறைக்கும் சேர்த்து தான் போராடு கிறோம். 

வழக்குப் போட்டால், என்னையும் என் 3 வயது மகன் புகழேந்தி யையும் சேர்த்து ஆறுபேர் மீதும் வழக்கு போடுங்கள். இல்லை யெனில், எந்தத் தவறு செய்யாத எங்களை விடு வியுங்கள் என்றேன். 

அதைக் காதிலேயே வாங்காத போலீஸார், 4 பேர் மீது மட்டும் நீதிபதி ராமசங்கரன் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து ள்ளார்கள். 

நீதிபதியிடம் கூட எங்கள் தரப்பு நியாயத்தைக் கூற விட வில்லை. நள்ளிரவில் தன்னந் தனியாகத் தஞ்சாவூரி லிருந்து கிளம்பி வந்தேன்.

திருச்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ள வளர்மதி ஆகியோரைச் சித்ரவதைச் செய்வதாக வழக்கறிஞர்கள் கூறு கிறார்கள். 
சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?
அடக்கு முறைகளால் மக்கள் போராட்டங் களை ஒடுக்க நினைக்கும் அரசிடம் இவை எதிர் பார்த்தது தான்” என்றார் காட்டமாக.

வளர்மதியை நேரில் சந்தித்த வழக்கறிஞர் ராஜா, “சிறையில் இருக்கும் வளர்மதி, குறிஞ் சித்தேன் ஆகியோரை திருச்சி பெண்கள் சிறையில் 

நிர்வாணப் படுத்தி சோதனை செய்ய முயன்ற போது அதற்கு தோழர்கள், கடந்த முறை கைது செய்யப்பட்ட போது, 

இதைக் கண்டித்தோமே என எதிர்ப்பு தெரிவித்த தால், நிர்வாண சோதனைக்கு உட்படுத்த வில்லை. 
இந்நிலையில் காவிரிக் காகப் போராடி கைதாகி சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவனின் தங்கை பாடகி லதா ஆகியோர், 

சிறை நிர்வாகத் திடம் மாத விடாய் காலங்களில் பயன் படுத்தும் `நாப்கின்’ கேட்டுள்ளனர். 

அப்போது சிறைக் காவலர், எல்லா நாளும் நீங்க நாப்கின் தான் பயன்படுத்து வீங்களா. ஸ்டாக் இல்லை எனக் கூறியிருக் கிறார்கள். 

இதே போல், சிறைக் கைதிகள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் களிடம் போன் பேச அனுமதி உள்ளது. 

ஆனால், வளர்மதி உள்ளிட்ட தோழர்களு க்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. 
மக்கள் உரிமைக்குப் போராடு பவர்களை, கைது செய்து உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்வதை அரசு தொடர்ச்சி யாகச் செய்து வருகிறது” என ஆதங்கப் பட்டார்.
குற்றச் சாட்டுகள் குறித்து கேட்க நாம் தொடர்பு கொண்ட சிறைத் துறை அதிகாரிகள், “சிறைக்குள் சிறை விதி முறைப்படி தான் சோதனை நடத்து கிறோம். 

இதே வளர்மதி, கடந்த முறை கைது செய்யப் பட்ட போது, நிர்வாணப் படுத்தி னார்கள், சித்ரவதை செய்தார்கள் எனக் கூறினார். 

இப்போதும் அதையே சொல்கிறார். சிறைக்குள் தங்களை சித்ரவதை செய்ததாக அவர்கள் சொல்வதில் துளியும் உண்மை யில்லை” என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings