தொட்டிலுடன் குழந்தையை சாலையில் தூக்கி வீசிய சூறை காற்று | Throwing the baby on the road with a cradle !

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பஜார் பகுதியில் இன்று அதிகாலை சூரைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. 


சூரைக் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தேவர் சோலை முருகன் கோவில் எதிரே அமைந்திருந்த 

ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரை கொண்ட, சுமார் 6 வீடுகளின் கூரைகள் பெயர்ந்து கடும் பாதிப்புக் குள்ளாகின.

குறிப்பாகச் சூரைக் காற்றில் கூரை பறந்த போது, வீட்டின் உள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 

அம்ஜத் என்பவரின் 3 வயது குழந்தை தொட்டி லுடன் ரோட்டில் வந்து விழுந்ததில், குழந்தை க்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இது குறித்து அப்பகுதி யில் உள்ளவர்கள் கூறுகை யில், ''தேவர் சோலை பகுதியில் நள்ளிரவு சுமார் 12.00 மணி முதல் சூரைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. 

இதில் தேவர் சோலை டவுன் பகுதியில் சுமார் 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் பெயர்ந்து, குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக் குள்ளாகினர்.

சூரைக் காற்றில், தொட்டி லுடன் 3 வயதுக் குழந்தை ஒன்று ரோட்டில் தூக்கி வீசப்பட்டது. 


நல்ல வேளை யாக அந்த நேரத்தில், ஊட்டிக்குச் சுற்றுலா வந்து திரும்பிய கேரள சுற்றுலாப் பயணிகள், 

வாகனத்தை நிறுத்தி, குழந்தை யின் நிலையைக் கண்டு, உடனடி யாக பத்தேரிக்குச் சிகிச்சை க்குக் கொண்டு செல்ல உதவினர். 

குறிப்பாக நேற்று சென்னை, பெங்களூரு அணிகளுக் கான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 

இருந்த தால், குடியிருப்பு வாசிகள் பெரும் பாலானோர் தூங்காமல் இருந்தனர். 

இதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இந்நிலை யில், பாதிக்கப் பட்ட பகுதியைப் பார்வை யிட்ட போலீஸார், 

'என்னப்பா பாத்து வீடு எல்லாம் கட்டி யிருக்கக் கூடாதா’ என்று அலட்சிய மாகக் கூறியது எங்களை மேலும் கவலை யடையச் செய்தது. 

காரணம் இங்கு வீடுகளை இழந்துள்ள வர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள் தான். 

அவர்கள் இந்த ஓடு, ஆஸ்பெட்டாஸ் வாங்கி வீடுகளைச் சீரமைக்க 2 மாதம் வேலை செய்ய வேண்டும். 

அதே போல, காலை வந்த வி.ஏ.ஓ., தாசில்தார் ஆகியோரும் நிவாரணம் குறித்து ஏதும் பேசாதது மிகுந்த கவலை யளிப்பதாக உள்ளது,” என்றனர்.
Tags: