இனி ரேஷனில் தினை, ராகி, கம்பு, சோளம் !

இனி ரேஷன் கடைகளில் தினை, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறு தானியங்களை மானிய விலையில் விற்க வேண்டும் என்று மத்திய அரசு அரசாணை பிறப்பித் துள்ளது. 
இனி ரேஷனில் தினை, ராகி, கம்பு, சோளம் !
இதை சித்த மருத்துவர் கு.சிவராமன் மகிழ்ந்து வரவேற் றுள்ளார். மானிய விலையில் சிறுதானிய விற்பனைத் திட்டத்தை தொடங்கிய 

ஜெயலலிதா அரசு, கடந்த 5 ஆண்டு களாக அதை கிடப்பில் போட்டு விட்டது. இப்போது அந்தத் திட்டத்தை மத்திய பி.ஜே.பி. அரசு தூசி தட்டியி ருக்கிறது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 686 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 

அதன் மூலம் 2 கோடியே 3 லட்சம் குடும்பத் தினருக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

10 கிலோ புழுங்கல் அரிசி, 10 கிலோ பச்சரிசி இலவச மாகவும், சர்க்கரை, பாமாயில், பருப்பு வகைகள் ஆகியவை மானிய விலையி லும் வழங்கப் படுகின்றன. 

தமிழக த்தில் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தில் கோதுமையை வழங்க வேண்டும் என்று தெரிவித்து, மத்திய அரசு கோதுமை ஒதுக்கீடு செய்வதால் அதை மாநில அரசும் வழங்குவ தாகத் கூறப்பட்டது. 

இந்நிலை யில், 'உடலுக்கு ஆரோக்கியம் தரும் ராகி, சாமை, தினை, வரகு, குதிரை வாலி போன்ற சிறு தானியங்களை 
ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை பல ஆண் டுகளாக தமிழகத் தில் உள்ளது. 

நஞ்சில்லா சிறு தானியங்கள் பயன்பாடு அதிகரிக்கும் போது அதன் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்கும். 

இதன் மூலம் அந்தத் தானியங் களின் விலையும் படிப்படியாகக் குறையும் என்று பல்வேறு யோசனை களை சிறுதானிய உற்பத்தி யாளர்கள், மத்திய-மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

``உடல் ஆரோக்கி யத்துக்கு வலு சேர்க்கும் தினை அரிசி, மாவு வகைகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யலாம்; 

மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கிராமப்புற விவசாயிகள் வாழ்வு சிறக்கும்" என்று 2013-ம் ஆண்டு, 

தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவராக இருந்த சாந்த ஷீலா நாயர் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார். 
2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி இந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். 

முதல் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக் கொண்டார். ஆனால், அந்தத் திட்டம் தொடக்க விழாவோடு நின்று போனது. 

2016-ம் ஆண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை யில், 'சிறு தானியங்கள் பயன் பாட்டை மக்களிடையே பிரபலப் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும்; 

ரேஷன் கடைகள் மூலம் அவை விநியோகி க்கப்படும்' என்று தெரிவிக்கப் பட்டது.

எனினும், 2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி யமைத்த அ.தி.மு.க அரசு, சிறு தானியங்கள் விற்பனை குறித்த எந்த அறிவிப்பை யும் வெளியிட வில்லை. 

இதற்கிடையே, மத்திய பி.ஜே.பி. அரசுக்குச் சிறு தானியங் களின் பயன் பாடுகள் குறித்தும், அவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிட மிருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டன.

இதையடுத்து, இதுபற்றி ஆய்வு செய்ய மத்திய வேளாண்மை அமைச்சகம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு, 
`ஊட்டச் சத்துகள் அதிகம் நிறைந்த சிறு தானியங் களைப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய பரிந்துரை செய்தது. 

அந்த அறிவிப்பு, மத்திய அரசிதழில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. இதுகுறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறுகை யில், 

`இந்தியா வில் இன்று நடக்கும், பல விஷயங்கள் நம்மை வெகுவாய்க் காயப் படுத்திக் கொண்டும், 

தாங்கொணா வேதனையைத் தூண்டிக் கொண்டும் இருக்கும் வேளையில், ஏப்ரல் 10-ம் தேதி வெளியான, மத்திய அரசின் ஆணை (அரசிதழ் அறிவிப்பு) மகிழ்வைத் தந்துள்ளது. 

ஆம், `தினை, ராகி, கம்பு, சோளம் முதலான அனைத்துச் சிறு தானியங் களும் வெறும் உணவு தானிய ங்கள் மட்டுமல்ல; 

உடலுக்கு ஊட்டம் தரும் தானியங்கள். சர்க்கரையைக் கட்டுப் படுத்த உணவில் சேர்க்கப்பட வேண்டி யவை. 

இவை ஒவ்வோர் இந்தியனு க்கும் சகாய விலையில் கிடைக்க வேண்டும்' என இந்திய அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. 
`இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங் களிலும் ரேஷன் கடைகளில் பொது விநியோக முறையில் இந்தத் தானியங்கள் வழங்கப்பட வேண்டும்' என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது பல ஆண்டுப் போராட்டத் திற்குக் கிடைத்த சிறிய வெற்றி. சுதந்திரத் துக்குப் பின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங் களும், 

விவசாய அமைப்பு களும், அரிசி மற்றும் கோதுமையைச் சுற்றியே ஆய்வு நடத்தி, அவற்றின் விநியோக த்தை முடுக்கி விட்டதில், சாமை, ராகி, கம்பு போன்ற தானியங்கள் ஏறத்தாழ வழக்கொழிந்து போன நிலையில், 

நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயப் பெரு மக்களின் முயற்சி யால் இன்று மானிய விலையில் சிறு தானியங்கள் கிடைப்பது சாத்தியப் பட்டுள்ளது. 

எனவே, இனி அனைத்து ரேஷன் கடை களிலும் சகாய விலையில் இத்தானி யங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, 

அந்தந்த மாநிலங் களை முடுக்கி விட வேண்டியது நம் கடமை. இந்த அறிவிப்பு கொஞ்சம் மகிழ்ச்சியையும் கூடுதல் உத்வேகத் தையும் தந்துள்ளது. 
இந்தப் பயணத்தை வேகமாகத் தொடர்வோம். அரசின் ஆணை யால் இத்தானியங் களுக்குக் குறைந்த பட்ச விலை நிர்ணயிக் கப்படும் நிலை உருவாகி யுள்ளது. 

தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இச்சூழலில், இத்தானியங் களின் உற்பத்தி விவாசாயி களுக்கு நிச்சயமாகக் கை கொடுக்கும் வாழ்வு தரும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இனி ரேஷனில் தினை, ராகி, கம்பு, சோளம் !
இது குறித்து, தமிழக உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரி களிடம் கேட்ட போது, ``மத்திய அரசின் அறிவிப்பு எங்களுக்குக் கிடைத் துள்ளது. 

சிறு தானியங்களைப் பொறுத்த வரை இப்போது, சந்தையில் கிலோவு க்கு வரகு அரிசி ரூ.60, தினை அரிசி ரூ.40, 

குதிரை வாலி அரிசி ரூ.60, சாமை ரூ. 70, பனி வரகு ரூ.60, கம்பு ரூ.35, கேழ்வரகு ரூ.35, நாட்டுக் கம்பு ரூ.40 என்ற விலை களில் கிடைக் கிறது. 

இவற்றை மொத்த விலையில் கொள்முதல் செய்து தான் நியாய விலைக் கடைகளில் கொடுக்க வேண்டும். 

ஒவ்வொரு தானிய த்துக்கும் மத்திய அரசு எவ்வளவு மானியம் தருகிறது என்பதைப் பொறுத்தே மாநில அரசின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். 

இப்போது, தமிழகச் சட்ட சபையில் விரைவில் துறை ரீதியான மானியக் கோரிக்கை கள் தாக்கல் செய்யப்படும் போது, 

இது பற்றி முதல்வர் தலைமை யிலான அமைச்சரவை முடிவு செய்து, அதுபற்றிய அறிவிப்பை வெளியிடும்'' என்றனர்.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறு தானியங் களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை 

2013-ம் ஆண்டிலேயே தமிழக அரசு தொடங்கிய போதிலும், அதனை முழு வீச்சில் நடை முறைப் படுத்தாமல் விட்டு விட்டது.

 'அம்மா உணவகங் களைப்' பின்பற்றி பரவலாக நாடு முழுவதும் இது போன்ற குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் கேண்டீன்கள் இப்போது பிரபலமாகி உள்ளன. 

அது போல, சிறுதானிய விற்பனைத் திட்டத்தை யும் தொடங்கிய வேகத்தி லேயே முழுமை யாக செயல் படுத்தி யிருந்தால், அதுவும் இன்றைக்கு நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக அமைந்தி ருக்கும். 

ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து, அதை தமிழ்நாடு செயல் படுத்தக் கூடிய நிலைக்கு தற்போது மாநில அரசு தள்ளப் பட்டுள்ளது. 
சிறுதானிய மானிய விலை விற்பனைத் திட்டம் தொடங்கி, ஐந்து ஆண்டு களாக மாநில அரசு குறட்டை விட்டு ஆழ்ந்து தூக்கத் தில் இருப்பதால், 

தமிழக விவசாயி களுக்கும் மக்களு க்கும் கிடைத்திருக்க வேண்டிய பயன்கள் பறிபோய் விட்டன. இனி மேலாவது விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?
Tags:
Privacy and cookie settings