அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் !

அரசின் கையிலேயே இருந்து செயல்படக் கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது. 
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் !
இதனால், பிள்ளைகளின் மேல் பெற்றோர்கள் வைக்கின்ற பாசம் பணமாக வசூலிக்கப் பட்டு, லட்சங்களும், கோடிகளும் புரளும் வணிக துறையாக இன்று கல்வித்துறை உருமாறி நிற்கிறது. 

அதே சமயம் தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார் போல் அரசு பள்ளியும் அதல பாதாள த்தில் சென்று கொண்டு ள்ளதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

அரசு பள்ளிகளின் வசதி வாய்ப்புகளும் ஆசிரியர் களின் எண்ணிக் கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கையோ ஆண்டுக் காண்டு சரிந்து கொண்டு தான் செல்கிறது. 

இதற்கு காரணம் அரசு பள்ளியில் படிக்க வைப்பதை பெற்றோர் கவுரவ குறை ச்சலாக நினைப்ப தால் தான். 
ஏன், அரசு ஊழியரின் குழந்தை கூட அரசு பள்ளியில் படிப்ப தில்லை. படிக்க வைக்க வசதி இல்லாதோர், படிக்க ஆர்வ மில்லாதோர், 

ஆசிரியர்களிடம் எந்த கேள்வியும் கேட்காத பிள்ளைகளே அரசு பள்ளியில் பெரும்பாலும் படித்து வருகின்றனர். 

இதனால் ஆசிரியர்களும் கற்பித்தலில் அதிக அக்கறை காட்டுவ தில்லை என் குற்றச் சாட்டு பரவலாக கூறப்படு கிறது. 

எனினும் ஒரு சில அரசு பள்ளிகளே தனியார் பள்ளி களுக்கு நிகராக செயல் பட்டு வந்ததை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்நிலை யில், நடப்பு கல்வி யாண்டுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சரிவை சரக்கட்டி, மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டிய பொறுப்பு கல்வித் துறைக்கு ஏற்பட் டுள்ளது. 

இதற்காக, சீர் கொடுத்து அரசு பள்ளிக்கு மாணவர் களை அழைப்பது என்ற முதல் அடியை ஆசிரியர்கள் எடுத்து வைத்தார்கள். 
பல மாவட்டங்களில் சீருடை, பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை சீர்வரிசையாக பெற்றோர்களிடம் கொடுத்து பிள்ளை களை பள்ளியில் சேர்க்கு மாறு வலியுறுத்தி வருகின்றனர். 

இது பெருமளவு அனைத்து பெற்றோரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்த முயற்சியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த தஞ்சை மாவட்டம் முன்னெடுத் துள்ளது. 

திருச்சிற்றம் பலம் துலுக்க விடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியே இதற்கான புது யுக்தியை கையிலெடுத்து உள்ளது. 

மாணவர் சேர்க்கைக்கு என்ன செய்வது என பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடி முடிவெடுத்தது. அதன் படி, நேற்று நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஒருவிழா ஏற்பாடு செய்யப் பட்டது. 
அதில், இந்த வருடம் முதல் பள்ளியில் சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை சேர்ந்த 15 மாணவர் களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தினர். 

அத்துடன் அந்த மாணவர் களின் பெற்றோர் களுக்கும் ரூ.1000 ஊக்கப் பரிசும் வழங்கினர். சுண்டி யிழுக்கும் பெயர் பலகை, நவீன பாடத் திட்டம், கண்ணை கவரும் சீருடை போன்ற கவர்ச்சிகர மான 

விளம்பரங் களில் வளைத்து போட்டு வரும் தனியார் பள்ளிகளிட மிருந்து மாணவர் களை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. 

அதற்காக, தனியார் பள்ளி களின் தலையில் குட்டு வைத்து, அதன் கடிவாள த்தை அடக்கி வைக்க புதுப்புது முயற்சிகளை கையிலெடுத்து வரும் தமிழக அரசின் பள்ளி களுக்கு கோடி பாராட்டுக்கள்.
Tags: