ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !

0
ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்க மற்ற செயலில் இறங்க, அது எங்கள் திட்டம் என்று கேப்டன் அப்ரூவர் ஆகி விட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார்.
ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
கேப்டன், துணைக்கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். 

மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருக் கின்றனர். 

ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்டு விட்டது. 

இத்தனை சம்பவங் களுக்குமான அடிப்படைக் காரணம் - ரிவர்ஸ் ஸ்விங். பேங்க்ராஃப்ட் என்ன செய்தார் என்பதைப் பற்றி மொத்த உலகமும் போதுமான அளவு விவாதித்து விட்டது. 

இதைச் செய்த முதல் ஆள் இவரா என்றால் இல்லை. முன்பு இது போன்ற தருணங் களில் இப்படி பிரச்னை பெரிதானதா என்றால் அதுவும் இல்லை. 

அப்படி யிருக்கையில் இப்போது மட்டும் ஏன்? இதை அறிந்து கொள்வதற்கு முன்னால், 'அதை அவர் ஏன் செய்தார்' என்ற கேள்விக்கு நாம் பதில் அறிந்து கொள்வது அவசியம். 

அதற்கு ரிவர்ஸ் ஸ்விங் (Reverse swing) பற்றி அறிந்து கொள்வதும் அவசியம். கூக்ளி, தூஸ்ரா, லெக் பிரேக், ஆஃப் பிரேக் என ஸ்பின்னர் களுக்கு எக்கச்சக்க ஆயுதங்கள் உண்டு. 
அதைப் போல் வேகப்பந்து வீச்சாளர்களு க்கு பௌன்ஸ், யார்க்கர், ஸ்விங் போன்ற வற்றைச் சொல்லலாம். ஆனால், ஓவரின் ஆறு பந்து களையும் பௌன்ஸராக வீச முடியாது. ஒன்று அல்லது இரண்டு தான். 

அதே போல் யார்க்கரை ஒவ்வொரு முறையாகவும் துல்லியமாக வீசிவிட முடியாது. ஃபுல் டாஸாக மாறி விணை யாகவும் வாய்ப்புண்டு. 

ஆக, ஃபாஸ்ட் பௌலர்கள் நம்பக் கூடிய ஒரே ஆயுதம் ஸ்விங் மட்டுமே. அதுவும் பந்து புதிதாக இருக்கும் வரை மட்டுமே இன்ஸ்விங் அல்லது அவுட்ஸ்விங் செய்ய முடியும். 

பந்து பழசாகி விட்டால் ஸ்விங் செய்தவது இயலாத காரியம். பழைய பந்திலும் எப்படியாவது பேட்ஸ் மேனைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்ற பௌலர் களின் எண்ணம் தான் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதத்தை அறிமுகப் படுத்தியது.

ரிவர்ஸ் ஸ்விங்

conventional swing எனப்படும் சாதாரண ஸ்விங்குக்கு பந்து புதிதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது, (வலது கை பேட்ஸ்மேன் களுக்கு) ஷைனிங் காக 

இருக்கும் பக்கம் கையின் வலது புறம் இருந்தால் அவுட் ஸ்விங்கும், இடது புறம் இருந்தால் இன்ஸ்விங்கும் ஆகும். இதற்கு நேர் எதிரானது தான் ரிவர்ஸ் ஸ்விங். 

ஷைனிங் பகுதி வலது புறமிருந்தால் இன்ஸ்விங்கும், இடது புறமிருந்தால் அவுட்ஸ்வி ங்கும் ஆகும். 'conventional swing' ரிவர்ஸாக நடப்பதால் அதற்கு ரிவர்ஸ் ஸ்விங் என்று பெயர்.

ரிவர்ஸ் ஸ்விங் மன்னன் எனப் புகழப்பட்ட பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், ஸ்விங் என்பது ஒரு அறிவியல் என்று கூறுவார். 

ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
ஆம், உண்மையில் அதன் பின்னால் அறிவியல் தான் ஒளிந்திருக்கிறது. பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வண்டு மென்றால், அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. 

பந்தின் இரு பகுதிகளின் எடையிலும் வித்யாசம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது, எடை அதிகமாக இருக்கும் பகுதியை (ஷைனிங் பகுதி) வலது புறம் வைத்து வீசினால் அவுட்ஸ்விங் ஆவதற்குப் பதிலாக இன்ஸ்விங் ஆகும். 

காரணம், எடை அதிகமாக இருக்கும் பகுதியை விட, குறைவாக இருக்கும் பகுதியில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். அது பந்தை உள் நோக்கித் தள்ளுவ தால், இன்ஸ்விங் ஆகும். 

பந்து காற்றில் இருக்கும் போதே உள்நோக்கி நகரத் தொடங்குவதால், (உதாரணமாக) ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரிலீஸ் ஆகும் பந்து, பிட்ச் ஆகும் போதே மிடில் ஸ்டம்ப் லைனுக்கு நேராக பிட்ச் ஆகும். 

ஷைனிங் பகுதியைக் கவனித்து, அவுட் ஸ்விங் ஆகும் என நினைக்கும் பேட்ஸ்மேன், பிட்ச் ஆகும் இடத்தி னாலும், அதன் பின் ஆகும் இன்ஸ்விங் கினாலும் ஏமாந்து போவார். 

இதனால் தான், ரிவர்ஸ் ஸ்விங் பௌலர்களின் மிகப்பெரிய ஆயுதமாகக் கருதப் படுகிறது. 

பந்தின் ஒரு பகுதி எடை 

சரி, அதெப்படி பந்தின் ஒரு பகுதி எடை அதிகமாகவும், மற்றொரு பகுதி குறை வாகவும் இருக்கும்..? பொதுவாக, ஆட்டத்தின் நடுவில் பழையதாகும் போது, பந்து அதன் ஷைனிங் தன்மையை இழக்கும். எடை குறையும். 

ஒரு பகுதியின் எடையைக் கூட்டுவதற்காகத் தான் ஃபீல்டிங் அணியினரும், பௌலரும் தொடர்ச்சியாக பந்தில் எச்சிலைத் துப்புவதும் தடவுவதுமாக இருப்பார்கள். 

ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
அதனால், இரண்டு பகுதிகளுக் கான எடையிலும் வித்யாசம் ஏற்படும். இதுவும் ஒரு கட்டத்தில் பௌல ர்களுக்குப் பிரச்னை யாகப் பட்டது. 

இப்படிச் செய்வதற்குப் பந்து மிகவும் பழையதாக வேண்டும். 60 ஓவர் வரை யிலாவது பயன் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பு..? 20-25 ஓவர்களுக்கு மேல் சாதாரண ஸ்விங் முறை களும் எடுபடாது. 

அதனால், ரிவர்ஸ் ஸ்விங் செய்ய அதுவரை கடை பிடித்து வந்த முறை களையும் ரிவர்ஸாகச் செய்யத் தொடங்கினர்.

தேய்ப்பதன் மூலம் எடையைக் குறைத்து விட்டால்

எதற்காக, பழைய தாகும் வரை காத்திருந்தது, ஒரு பகுதியின் எடையைக் கூட்ட வேண்டும்? பேசாமல் கொஞ்சம் புதிதாக இருக்கும் போதே இன்னொரு பகுதியின் எடையைக் குறைத்து விட்டால்...? 

இந்தச் சிந்தனை எழுந்த பிறகு தான் Ball tampering என்ற வார்த்தை புழக்க த்துக்கு வந்தது. 

வீரர்கள், பந்தின் ஒரு பக்கத்தை ஏதேனும் பொருள் கொண்டு தேய்ப்பதன் மூலம், அதன் ஷைனிங் தன்மையை இழக்கச் செய்து, எடையைக் குறைப்பதை வழக்க மாகக் கொண்டி ருந்தனர். 
ஷூவில் இருக்கும் ஆணி, ஜிப், பாட்டில் மூடிகள், விரல் நகம் என எத்தனையோ பொருள் களைக் கொண்டு இதை நடைமுறைப் படுத்தத் தொடங்கி னார்கள். 

ஆட்டத்தின் எந்த தருணத்திலும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் பேட்ஸ்மேன் களைத் தாக்கின. கொஞ்சமும் எதிர் பாராத பேட்ஸ்மேன்கள் இதனால் திக்கு முக்காடிப் போனார்கள். 

90-களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கோலோச்சி யதற்கு மிகப்பெரிய காரணம் இது தான். ஏனெனில், இது 'மேட் இன் பாகிஸ்தான்'. இதை அறிமுகம் செய்து வைத்தவர், பாகிஸ்தான் பௌலரான சர்ஃபராஸ் நவாஸ்.

அந்தக் கால கட்டத்தில் பாகிஸ்தான் அணி மீது தொடர்ச்சி யாக ball tampering புகார் வைக்கப் பட்டது. இம்ரான் கான் காலத்தில் தொடங்கி, பின்னர் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் என்று ரிவர்ஸ் ஸ்விங்கில் இவர்கள் மிரட்ட, இவர்களை சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

பந்தை சேதிப் படுத்திய ஷோயப்

'Looking after the cricket ball' என்று அக்ரம் தான் விளை யாடிய காலத்தில் சொன்ன ஒரு வாசகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதாவது பந்தின் தன்மையை ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஏற்றது போல் பராமரிப்பது. 

அதில் மொத்த அணிக்கும் பங்கு இருந்த தாகக் கூறினார் அக்ரம். ஆனால், அவர்கள் பந்தை எப்படிக் கையாண் டார்கள் என்பது பற்றியும், அவர்களின் ரிவர்ஸ் ஸ்விங் மந்திரத்தைப் பற்றியும் வெளியே சொல்ல மறுத்து விட்டார்.

அவருக்கு அடுத்த தலைமுறை வீரரான ஷோயப் அக்தர், தான் அடிக்கடி பந்தை சேதப் படுத்திய தாக 'Controversially yours' என்ற தன் சுய சரிதையில் குறிப்பிட்டார். 

எல்லா ஆடுகளுங்களும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் போது, பௌலர் களான நாங்களும் இங்கு பிழைக்க வேண்டுமே! என்று 

ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
அதற்கான காரணத்தைக் குறிப் பிட்டிருந்த அக்தர், கிட்டத் தட்ட அனைத்து பாகிஸ்தான் பௌலர் களுமே பந்தை சேதிப் படுத்திய தாக எழுதி யிருந்தார். 

அக்தர் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக இரண்டு முறை தண்டிக்கப் பட்டவர். இவ்வளவு ஏன், 1990-ல் பாகிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக நியூசிலாந்து வீரர்கள் கிறிஸ் பிரிங்கிள், மார்டின் குரோவ் ஆகியோரும் ஒப்புக் கொண்டனர்.

நான் பேட்டிங் செய்த போது, எதேச்சையாக பந்தை கையில் எடுத்துப் பார்த்தேன். அப்போது பந்தின் ஒரு பகுதி மிகவும் கடுமையாக அடி வாங்கி யிருந்தது. 

பாகிஸ்தான் வீரர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக வேண்டு மென்றே பந்தை சேதப் படுத்தியது தெரிய வந்தது. 

அதனால், அந்த தொடரின் 3-வது போட்டியில் நாங்களும் அதைப் பயன் படுத்தினோம் என்று 2006-ம் ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார் மார்டின் குரோவ். 

இதை யெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அக்ரம் கூறிய 'Looking after the cricket ball' என்பது ball tampering தான் என்று ஒரு வகையில் தெளிவா கிறது.

அக்ரம் சொல்லி யதன்  மூலம், இந்த ball tampering அனைத்து வீரர்களு க்குமே வேலை யாகக் கொடுக்கப் பட்டிருக் கிறது என்பதும் புரிகிறது. 
பௌலர் மட்டுமே செய்தால், அதன் தன்மையை மாற்ற தாமதமாகும். அனைவரும் அதில் ஈடுபட்டால், பந்து சீக்கிரம் பழசாகும். 

அதனால், அந்தப் பொறுப்பு ஃபீல்டர்களின் தலையிலும் விழுகிறது. மார்கஸ் டிரஸ்கோதிக், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி முதல் இப்போது பேங்க்ராஃப்ட் வரை அதன் பலிகடா தான். இப்போது பேங்க்ராஃப்ட் பந்தைச் சேதப் படுத்தியதன் நோக்கம் புரிகிறதா..?

ஸ்விங் ஆஸ்திரேலியா

ஆனால், ஆஸ்திரேலி யர்கள் இந்த முடிவைக் கையில் எடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பந்து வீச்சாளர்களின் ஸ்விங் மூவ்மென்ட்களை தொடர்ந்து கண்கானித்த ஒரு புள்ளி விவரம், கடந்த 2 ஆண்டுகளில், (25-வது ஓவர் முதல் 80-வது ஓவர் வரை) 

ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பௌலர்கள் சராசரியாக 0.82 டிகிரி அளவுக்குத் தான் ஸ்விங் மூவ்மென்ட் பெற்றிருக் கிறார்கள் என்று சொல்கிறது. 

ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
மற்ற அணிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் குறைவு. சொல்லப் போனால், ஜிம்பாப்வே வைத் தவிர அனைத்து அணியின் பௌலர் களுமே ஆஸ்திரே லியாவை விட நல்ல ஸ்விங் மூவ்மென்ட் ஏற்படுத்தி யுள்ளனர். 

இத்தனை க்கும் இன்றைய தேதிக்கு ரிவர்ஸ் ஸ்விங் மன்னனாகக் கருதப்படும் மிட்சல் ஸ்டார்க் இருந்தும் இந்த நிலமை!

ஆஸ்திரேலிய அணி

சரி, எத்தனையோ அணிகள், எத்தனையோ முன்னணி வீரர்கள் அதைத் தொடர்ந்து செய்திருக் கின்றன. ஆனால், இப்போது ஆஸ்திரேலிய அணி மீது மட்டும் ஏன் இவ்வளவு உக்கிரம் காட்ட வேண்டும்..? 

பாகிஸ்தானி  யர்கள் அதைப் பயன்படுத்தி யதிலும், ஆஸ்திரேலி யர்கள் அதைப் பயன் படுத்தியதி லும் ஒரு வித்யாசம் இருக்கிறது... 

அக்தர் தன் சுயசரிதையில் சொல்லி யிருப்பது - "Every pitch is favouring the batsmen and this is the only way to SURVIVE". அக்தர் செய்ததற்கோ, அக்ரம் செய்ததற்கோ, இம்ரான் கான் செய்ததற்கோ காரணம் அது தான். 

கொஞ்சம் கூட பந்து வீச்சுக்கு ஒத்துழைக் காத ஆடு களங்களில் சர்வைவ் ஆக வேண்டும். அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட போட்டியையும் டார்கெட் செய்து, அந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வில்லை. 

ஆஸ்திரேலியா வைத்துக் கொண்ட ஆப்பும், அறிவியலும் !
ஆனால், ஆஸ்திரேலியா செய்ததன் நோ க்கம், 'தென்னாப் பிரிக்காவை வீழ்த்த வேண்டும். இந்தத் தொடரை வெல்ல வேண்டும்' என்பது மட்டுமே. 

இப்படிப் பட்டவர்கள் வெற்றிக் காக அடுத்து எந்த அளவுக்கும் செல்வார்கள். அதற்காக பாகிஸ்தானி யர்கள் செய்ததை நியாயப் படுத்த வில்லை. 

அதுவும் தவறு தான். ஆனால், ஆஸ்திரேலி யர்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத தவறு. ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலை. அக்ரம் சொன்னது போல் அது அறிவியல். 

அறிவியலில் புகுத்தப்படும் திருட்டுத் தனங்கள் மோசமான பின் விளைவை மட்டுமே கொடுக்கும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)