மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து ஆஸ்திரேலியா !

0
தோல்வியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்று விடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்ன வெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து ஆஸ்திரேலியா !
கடந்த 50 ஆண்டு களில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திரு க்கிறது ஆஸ்திரேலியா. 

கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டு களில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல்.

உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்பட வேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத் துக்குள் வந்து விழும் என்பது யாருமே எதி ர்பாராதது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கட்டி எழுப்பிய, ஆஸ்திரேலியாவின் மிக முக்கியக் கேப்டனான ஆலன் பார்டரை மறந்து, அவர் வழியிலிருந்து விலகியது தான் இப்போதைய ஸ்மித்தின் அழிவுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அவமானத்துக்கும் காரணம்.

ஆலன் பார்டரிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருந்தது. ஆனால், தோல்விக்காக அவர் பயப்படவில்லை என்பது தான் இன்றைய கிரிக்கெட் உலகம் நினைவு கூர வேண்டிய முக்கியப் பாடம். 
இதை வெறும் கிரிக்கெட் கேப்டன்ஷி ப்போடு மட்டும் ஒப்பிட முடியாது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்த இரண்டு ஆஸ்திரேலியர்களே உதாரணம்.

ஒரு தலைவன் இருக்கிறான்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஆலன் பார்டருக்கு முன், ஆலன் பார்டரு க்குப் பின் என்று பிரிக்கலாம். 

ஐந்து உலகக் கோப்பை களை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, ஆலன் பார்டரின் வருகைக்கு முன்பு `தோத்தாங் கோளீஸ்' என்று அவமானப் படுத்தப் பட்ட அணி தான்.

1983-ம் ஆண்டு முதல் முறையாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஓரங்கட்டி உலகக் கோப்பையை வெல்கிறது இந்தியா. 

'இனி இந்தியா தான் கிரிக்கெட்டை ஆளப் போகிறது' என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த போது தனி ஒரு மனிதனாக ஆஸ்திரேலியா வைக் கட்டி எழுப்பினார் ஆலன் பார்டர். 

அவர் கிரிக்கெட்டின் புதிய பேரரசாக ஆஸ்திரேலியாவை உருவாக்க இந்தியாவின் ஃபார்முலா வைப் பின்பற்ற வில்லை. 1984-ம் ஆண்டு கிம் ஹியூஸிட மிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பு ஆலன் பார்டருக்கு வந்தது. 

தொடர் விமர்சனங்களால், அவமானங்களால் மனம் தாள முடியாத துயரத்தோடு கேப்டன் பொறுப்பை விட்டு விலகுகிறேன் என்று செய்தி யாளர்கள் முன் அழுது கொண்டே சொன்னார் ஹியூஸ். 

அந்த அழுகை தான் ஒரு வகையில் பார்டரைப் பலப்படுத் தியது. நாம் ஒரு தோல்வியடைந்த, நம்பிக்கை யற்ற அணிக்குத் தான் கேப்டனாகப் பொறுப் பேற்கிறோம். 

ஆனால், நான் நம்பிக்கை இழந்து விடக் கூடாது' என்கிற முடிவை அப்போது தான் எடுத்தேன்' என்கிறார் ஆலன் பார்டர்.

ஆலன் பார்டர் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை முதல் போட்டியில் சந்தித்தது. 
மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து ஆஸ்திரேலியா !
அடிலெய்டில் நடை பெற்ற அந்த டெஸ்ட்டில் 191 ரன்கள் வித்தியா சத்தில் தோல்வி யடைந்தது ஆஸ்திரேலியா. அடுத்த டுத்தும் தோல்விகள் தான். 1985 ஆஷஸ் போட்டியில் 1-3 என இங்கிலாந் திடம் தொடரை இழந்தது. 

ஆனால், தனியொரு பேட்ஸ்மே னாக ஆஸ்திரேலிய அணியை முதுகில் தூக்கிச் சுமக்க ஆரம்பித் தார் ஆலன் பார்டர். உலகின் சிறந்த பேட்ஸ் மேனாக உருவெடுக்க ஆரம்பித்தார்.  `நம்மால் வெற்றிபெற முடியாது. 

தோல்வி தான் அடையப் போகிறோம். ஆனால், அவ்வளவு சீக்கிரத்தில் தோற்று விடக்கூடாது. எதிர் அணியின் வெற்றியைத் தாமதப்படுத்தி கொண் டேயிருக்க வேண்டும் என்பது தான் ஆலன் பார்டர் கற்றுத்தரும் முதல் கேப்டன்ஷிப் பாடம்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே யிருந்தாலும் தனி பேட்ஸ்மே னாக களத்தில் நின்று எதிர் அணியின் வெற்றியைத் தாமதப் படுத்திக் கொண்டே யிருப்பார் பார்டர். 

ஆஷஸு க்கு அடுத்து நியூஸிலாந்து பயணம். `அங்கேயும் பார்டர் மட்டுமே விளை யாடுவார். எதிர் அணி வெற்றி பெறும்' என்கிற அதே காட்சிகள் தாம். 

ஆஸ்திரேலியா 1 டெஸ்ட்டில் வெற்றி பெற 3 டெஸ்ட் போட்டி களில் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், வெளியே சத்த மில்லாமல் அணிக்குள் மிகப் பெரிய மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே யிருந்தார் ஆலன் பார்டர்.
தோல்வி யடையப் போகிறோம் என்றாலும் யாருக்கும் அடிபணி யாதீர்கள். தோல்வி யடைந்தாலும் நாம்தான் உலகின் சிறந்த அணியாக மாறப் போகிறோம் என்கிற நம்பிக்கையை அணிக்குள் விதைத்துக் கொண்டே யிருந்தார். 

இன்னொரு பக்கம் அணிக்குள் இளம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டே யிருந்தார். ஸ்டீவ் வாக் அப்போது தான் அணிக்குள் வந்தார். டேவிட் பூன் ஃபார்முக்கு வந்தார்.

ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்த தொடர் இந்தியாவுக்கு எதிரான தொடர் தான். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. டேவிட் பூன், ஆலன் பார்டர் சதம் அடிக்க, டீன் ஜோன்ஸ் இரட்டை சதம் அடித்தார். 

இந்திய அணியும் கடுமை யாகப் போராட வரலாறு காணாத போட்டியாக டை-யில் முடிந்தது சென்னை டெஸ்ட். அடுத்த இரண்டு போட்டி களும் டிராவில் முடிந்தன. 

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கிட்டத் தட்ட எல்லோருமே ஃபார்முக்கு வந்த தொடர் அது தான். இந்தியா வில் எப்படி ஆட வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் முழுமை யாகக் கற்றுக் கொண்ட தொடர் அது தான்.

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில்... கிரிக்கெட்டில் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு ஸ்கெட்ச் போடும் வித்தையை அப்போது தான் அறிமுகப் படுத்தினார் ஆலன் பார்டர். 

மிட் ஆன், மிட் ஆஃப், கவர், மிட் விக்கெட் எனப் பாரம்பர்யமாகக் கடை பிடிக்கப்பட்டு வந்த ஃபீல்டிங் பொசிஷனை ஒட்டு மொத்த மாக மாற்றி யமைத்தார். 
சில்லி மிட் விக்கெட், கல்லி, டீப் எக்ஸ்ட்ரா கவர் என மறந்து போயிருந்த பல ஃபீல்டிங் பொசிஷன் களை மீண்டும் உயிர்பெற வைத்தார். 

எதிர் அணியின் பேட்ஸ் மேன்கள் எங்கு அடிக்கடி ஆடுவார் களோ அந்தத் திசையில் சரியாக ஃபீல்டர் களை நிறுத்த எதிர் அணிகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. 

ஆஸ்திரேலியா எழுந்து நின்றது. உலகக் கோப்பையை வென்றது. தொடர் தோல்வி களைச் சந்திக்கும் அணியாக இருந்த ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகள் சந்திக்கும் அணியாக அதிரடி மாற்றம் கண்டது. 

எதிரியின் பலத்தைக் கண்டறிந்து அதிரடி யாகத் தாக்குவது தான் பார்டர் கற்றுத் தந்த இரண்டா வது கேப்டன்ஷிப் பாடம். ஆலன் பார்டரின் அதிரடிகள் கேப்டன் ஷிப்போடு முடிய வில்லை. 

தேர்வுக் குழுவின் உறுப்பி னராக அவர் செய்தது தான் பிசிசிஐ உள்பட இன்று உலக கிரிக்கெட் அமைப்புகளுக்கே பெரிய மேனேஜ்மென்ட் பாடம். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக்கை கேப்டன் ஷிப்பிலிருந்து இறக்கியவர் பார்டர் தான். 

இயான் ஹீலிக்கும், மார்க் வாக்கும் ஓய்வு கொடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் என இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப் பட்டதற் கும் ஆலன் பார்டர் தான் காரணம். 

`இவர் எப்படிப் பட்ட வீரர் தெரியுமா? இவர் என்ன வெல்லாம் செய்திருக் கிறார் தெரியுமா? எனப் பழைய பெர்ஃபாமென்ஸ் களைப் பேசாதீர்கள். 

எனக்கு இப்போது திறமை யாக விளையாடும் 11 வீரர்கள் தான் வேண்டும் என்று சொன்ன தோடு அதை செய்தும் காட்டியவர் ஆலன் பார்டர். 

அவர் வகுத்த பாதை தான் 1999, 2003, 2007 எனத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வை ஹாட்ரிக் உலகக் கோப்பை களை வெல்ல வைத்தது. 
`அணிக்கு உதவாதவர் என்றால் அவர் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தவர் என்றாலும் ஓரங்கட்டு' என்பது தான் ஆலன் பார்டர் சொல்லித் தரும் கடைசிப் பாடம்.

அணியைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்தி ருந்தார் ஆலன் பார்டர். ஆனால், அணியின் ஒட்டுமொத்தக் கட்டுப் பாடும் ஸ்டீவ் ஸ்மித்திடம் இல்லை. 

வீரர்கள் தவறு செய்தால் அதற்கு வக்காலத்து வாங்கும் கேப்டனாகத் தான் இருந்தாரே தவிர தவறி ழைக்கும் வீரர்களைத் தட்டிக் கேட்கும் கேப்டனாக இல்லை. 

மிக முக்கிய மாக மற்றவர்கள் சொல்லும் அபத்தமான ஆலோசனை களை அவர் ஏற்க ஆரம்பித்தது தான் அழிவின் உச்சம். 
மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து ஆஸ்திரேலியா !
ஒரே ஊர்க்காரரான, உதவி கேப்டன் டேவிட் வார்னரின் ஆலோசனை களைக் கேட்டு, அதன் வழியில் நடந்து இப்போது அசிங்கப் பட்டு நிற்கிறார் ஸ்மித். 

ஒரு பேட்ஸ்மேனாக டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த போதும் கேப்டனுக் கான எல்லாத் தகுதி களையும் அவர் இழந்தி ருந்தது தான் எல்லா அவமானங் களுக்குமான முதல் காரணம். 

ஸ்மித்தின் தவறான வழி காட்டுதலால், முன் உதாரணத்தால் தென் ஆப்பிரிக்க மண்ணில் தடுமாறி இன்று மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)