ஆவின் பால் கலப்பட வழக்கில் 3 பேர் விடுவிப்பு... ஐகோர்ட்டு !

0
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு டேங்கர் லாரியில் பால் கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும். 
ஆவின் பால் கலப்பட வழக்கில் 3 பேர் விடுவிப்பு... ஐகோர்ட்டு !
இவ்வாறு கொண்டு வரப்பட்ட பாலை திருடிக் கொண்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்தது போலீசார் சோதனை யின் போது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் வெள்ளி மேடுபட்டி போலீசார் கடந்த 2014-ல் வழக்குப் பதிவு செய்தனர். 

பின்னர், இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப் பட்டது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி 

போலீசார் கலப்பட பாலை கொண்டு சென்ற லாரி நிறுவன உரிமை யாளரும் அப்போதைய அதிமுக மாவட்ட செயலாளரான வைத்திய நாதன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ் திரேட் நீதி மன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. 
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கேட்டு, வைத்திய நாதன், அவரது மனைவி ரேவதி, அப்துல் ரஹீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், இந்த 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தர விட்டார்.

அந்த உத்தரவில், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்ப ட்ட இரண்டு பேரை கீழ் கோர்ட்டு ஏற்கனவே விடுவித் துள்ளது. இந்த இருவரும் மனுதாரர் களிடம் வேலைப் பார்த்து வந்தவர்கள்.

அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான், இந்த 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 

ஆனால், வழக்கில் முக்கியமான வர்களாக கருதப்படும் அந்த இருவரை விடுவித்த பின்னர், எப்படி இவ்வழக்கை தொடர்ந்து நடத்த முடியும்? 
ஆவின் பாலில் கலப்படம் செய்ததற் கான ஆதாரமோ, திருட்டு நடந்தத ற்கான ஆதாரமோ இல்லாத நிலையில், 

வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்துவது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)