சசிகலாவின் கணவரான நடராசன் காலமானார் !

0
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரிய ருமான ம.நடராசன் சென்னை யில் கால மானார். 

சசிகலாவின் கணவரான நடராசன் காலமானார் !
நடராசன்

சசிகலா வின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்தார். இதை யடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. 

அறுவை சிகிச்சை செய்யப் பட்ட பின்பு, அவரை பார்ப்பதற் காகச் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். 

தொடர்ந்து, வீட்டில் இருந்த வாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன.

இதனால், நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப் பட்டுள்ள தாகத் தெரிவிக்கப் பட்டது. 

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக் காததால் நள்ளிரவு 1.35 மணியள வில் நடராசன் மரண மடைந்தார். 

இதை, மருத்துவ மனை நிர்வாகம் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட் டுள்ளது. 
அவரது உடல் எம்பாமிங் செய்யப்படு வதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. 

எம்பாமிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியள வில் அஞ்சலிக் காக வைக்கப்படும் என தகவல் வெளியாகி யுள்ளது. 

இதை யடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.

நடராசன் வாழ்க்கை...

தஞ்சாவூரைச் சேர்ந்த நடராசன், அரசு மக்கள் தொடர்பு அதிகாரி யாக வாழ்க்கையைத் தொடங்கி யவர். 

தி.மு.க மாணவரணி யில் இருந்த போது, கருணாநிதி முன்னிலை யில் சசிகலாவை மணந்தார். 
மக்கள் தொடர்பு அதிகாரி என்பதால், அரசு அதிகாரி களுடன் நட்பு பாராட்டி வந்தார். அந்த வகையில், கலெக்டர் சந்திரலேகா வுடன் ஏற்பட்ட நட்பால், 

அவர்மூலம் ஜெயலலிதா வின் அரசியல் பொதுக் கூட்டங் களை வீடியோ கவரேஜ் எடுக்கும் 

வேலையைத் தனது மனைவி நடத்திவந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கிக் கொடுத்தார். 

இதன் மூலம் ஏற்பட்ட நட்பால், பின்னாளில் ஜெயலலிதா வுடனே சசிகலா வும், நடராசனும் தங்கினர். 

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அ.தி.மு.க ஜெயலலிதா வின் பக்கம் வந்தது. அ.தி.மு.க தொடர் பான அனைத்து வேலை களையும் நடராசன் கவனித்து வந்தார். 

ஆனால், நாளைடை வில் ஜெயலலிதா வுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, போயஸ் கார்டனை விட்டு வெளியேறி னார். 
எனினும், சசிகலா அவருடன் செல்ல வில்லை. போயஸ் கார்டனை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கை களில் நடராசன் ஈடுபட்டு வந்தார்.

சொந்த ஊரில்...

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக் காக வைத்த பிறகு, அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் 

எனத் தகவல் வெளியாகி யுள்ளதால், தஞ்சாவூரில் உள்ள அவரின் ஆதர வாளர்கள், உறவினர்கள் என அவரது வீட்டில் கூடத் தொடங்கி யுள்ளனர்.

பெசன்ட் நகர் வீட்டில் ஏற்பாடுகள்...

நடராசன் உடலுக்கு எம்பாமிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில், காலை 7 மணியள வில் அஞ்சலிக் காக வைக்கப்பட உள்ளது. 

இதற்காக, பெசன்ட் நகர் வீட்டில் தற்போது ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது.
நடராசனின் மரணத்தைத் தொடர்ந்து சசிகலா பரோலில் வரவுள்ளார். 

ஏற்கெனவே, பரோல் கோரி மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், இறப்புச் சான்றிதழ் கிடைத்த 

ஒரு மணி நேரத்தில் பரோல் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகி யுள்ளது. இதற்கான ஏற்பாடு களை அவரது உதவி யாளர்கள் மேற் கொண்டு வருகின் றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings