திரைத் துறையில் எனது வேடத்தை சரியாக செய்து விட்டேன். இனி அரசியல் வாதியாக எனது வேடத்தை சிறப்பாக செய்வேன் என்றார் நடிகர் ரஜினிகாந்த். 


நேற்று ரிஷிகேஷ் வந்த ரஜினிகாந்த், அங்குள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை, தியானத்தில் ஈடுபட்டார். 

பின்னர் ஆங்கில டிவி சேனல் நிருபருக்கு அவர் அளித்த பேட்டி: 1995ம் ஆண்டிலிருந்து இமய மலைக்கு வருகிறேன். இடையில் உடல் நலம் பாதிக்கப் பட்டதால் வர முடிய வில்லை. 

ஒரு மனிதன் தன்னைத் தானே தேடி உணர்வது தான் அந்தப் பிறவியின் முக்கிய வேலை. அதற்காகத் தான் நான் இங்கே வந்துள்ளேன். 

நிறைய தியானம், ஆன்மிகப் புத்தகங்கள் படிப்பது, எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக மக்களைச் சந்திப்பது போன்ற வற்றுக்காகத் தான் இங்கே வந்திருக் கிறேன். 

அரசியல் வாதிகள், சினிமாக் காரர்கள் யாரும் இங்கே எனக்குத் தேவை யில்லை.

மக்கள், இயற்கை போதும். தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக நடமாட முடியாது. மக்களோடு மக்களாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். 

ஆனால் அந்த சுதந்திர த்தை எப்போதோ இழந்து விட்டேன். ஆனால் இமய மலையில் முன்பெல்லாம் நான் சுதந்திரமாக இருந்தேன். 

ஆனால் இனி இங்கும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டேன். ஒரு நடிகனாக எனக்கு இறைவன் கொடுத்த வேடத்தை சரியாகவே செய்து விட்டதாக உணர்கிறேன். 

இப்போது அரசியல்வாதி என்ற புதிய பாத்திரத்தைக் கொடுத் துள்ளான் இறைவன். அதையும் 100 சதவீதம் சிறப்பாக செய்வேன் என நம்புகிறேன். 

இந்தப் பயணத்து க்குப் பின் ஒரு அரசியல் வாதியாக நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். 

அரசியலை முன்னிட்டு இந்த ஆன்மிக பயணமா என கேட்கிறீர்கள். அப்படியும் வைத்துக் கொள்ளலாம். 

அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் களமாகவே பார்க்கிறேன். அதற்காக நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். மக்களிடம் எதிர் பார்ப்புகள் இருக்கும். அனைத்து க்கும் தயாராகி யுள்ளேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.