துப்பாக்கி தான் பேசும்... போலீஸின் ஆபரேஷன் !

0
ரவுடித் தனத்தை விடவில்லை என்றால் என் துப்பாக்கி பேசும்' என்று சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீஸ் உயரதிகாரி எச்சரித்தார். 

துப்பாக்கி தான் பேசும்... போலீஸின் ஆபரேஷன் !
அதன் பிறகும் அந்த ரவுடி டீம், சென்னையில் பல சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் தொடர்பான பைல்கள் நீண்ட காலத்து க்குப் பிறகு தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ள தாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையை அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம் கிராமத்தில் பிரபல ரவுடி பினு, கூட்டாளி களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 

பிறகு ரவுடிகளைப் பிடிக்கும் பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. என்கவுன்டர் என்ற ஆயுதத்தை போலீஸார் கையில் எடுத்தவுடன் பினு, போலீஸில் சரணடைந்தார். 

அவரது கூட்டாளிகள் கனகராஜ், விக்கி, சரவணன் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். பினுவின் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய ராதா கிருஷ்ணன் சேலத்தில் சரணடைந்தார். 

உயிர்பயத்தில் ரவுடிகள் சரணடைவது தொடர் கதையாகி விட்டது. இதனால், சென்னைப் புழல் சிறைச் சாலையில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.
இந்தச் சூழ்நிலை யில் தலைமறை வாக இருக்கும் ரவுடிகள் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், சீக்ரெட் ஆபரேசன் டீமை உருவாக்கி யுள்ளார். 

இந்த டீம் நீண்ட காலமாக தலைமறை வாக இருக்கும் ரவுடிகளின் பட்டியலோடு தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்தி யுள்ளது. இந்த டீமில் உள்ளவர் களுக்குத் தேவைப் பட்டால் துப்பாக்கியைப் பயன் படுத்தவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில் தான் மதுரை, சிக்கந்தர் சாவடி பகுதியில் ரவுடிகள் மந்திரி முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர். இது, தலைமறைவு ரவுடிகளுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னையில் டாப் லிஸ்ட்டில் உள்ள சில தலை மறைவு ரவுடிகள் தங்களுக்கு விசுவாசமான காக்கிகள் மூலம் சரண்டராகு வதற்கான நேரத்தைக் கேட்டு தூது விட்டுள்ளனர். 

அதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வரும் நேரத்தில் கடந்த நான்கு ஆண்டு களாகத் தேடப்பட்டு வரும் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரு க்கு போலீஸார் 'ஸ்கெட்ச்' போட்டுள்ளனர். 
அடுத்து, தேனாம் பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரைப் பிடிக்க மாதக் கணக்கில் தவம் கிடக்கிறது போலீஸ் டீம்.

போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்

இது குறித்து போலீஸார் கூறுகை யில், "சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவர், இன்று ரியல் எஸ்டேட் அதிபர் என்ற போர்வை யில் சமூகத்தில் செல்வாக் குடன் இருக்கிறார். 

அவரது ஹிஸ்டரி பைலை சமீபத்தில் போலீஸார் தூசிதட்டி எடுத்துள்ளனர். இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற போலீஸ் நிலை யங்களில் தொடர்ச்சி யாக வழக்குகள் பதிவாகி யிருந்தன. 

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது போலீஸ் துணைக் கமிஷனராக இருந்த ஒருவர், சம்பந்தப் பட்ட கூலிப் படையின் தலைவனை நேரில் அழைத்து எச்சரித்தார். 

'இனியும் உன் அராஜகம் தொடர்ந்தால் என்னுடைய துப்பாக்கிக்கு நீ பதில் சொல்ல வேண்டும்' என்று கூறியதை யடுத்து அந்த டீம் அமைதி யானது. 

தற்போது, அவர் எதிலும் நேரிடையாக தலை யிடாமல் பின்னா லிருந்து இயக்கி வருகிறார். அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். இதனால், அவர் மீது கை வைப்பதில் சிக்கல்கள் உள்ளன. 
அவரது வலது கரமான வாசனைத் திரவியம் பெயரைக் கொண்ட அந்த நபர் இதுவரை தலை மறைவு பட்டியலில் இருந்து வருகிறார். 

கொலை வழக்கில் தேடப்படும் அவர், இன்னும் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார். ஆனால், அவரையும் எங்களால் நெருங்க முடிய வில்லை.

ரவுடி

இந்த டீம் செய்த கொலைகள் 1990 களில் சென்னை போலீஸை அலற வைத்தது. கொலை செய்தவரின் உடலில் மீறி ஏறி கொக்கரித்த சம்பவங் களும் நிகழ்ந்துள்ளன. 

ஒரு கட்டத்தில் சென்னை போலீஸாரின் என்கவுன்டரி லிருந்து அரசியல் செல்வாக் குக் காரணமாகத் தப்பினார். அவரது கூட்டாளி களைக் கண் காணித்து வருகிறோம். 

விரைவில், தலை மறைவு ரவுடிகளைக் கூண்டோடு பிடித்து உள்ளே தள்ளி விடுவோம்" என்றனர். சேலத்தில் ரவுடிக்கு கேக் ஊட்டிய காக்கி விவகாரம் தமிழகக் காவல் துறையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

ரவுடிகளுடன் கை கோத்துள்ள காக்கிகளின் பட்டியலும் டி.ஜி.பி. அலுவல கத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதில், இடம் பிடித்துள்ள காக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளன. 

தமிழகத்தை விட்டு ரவுடிகள் ஓடி விட்டதாக ஜெயலலிதா கூறியது போல அவரது வழியில் ஆட்சியை நடத்து பவர்களும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். 
ஆனால், அரசியல் செய்வதற்கு ரவுடிகளின் உதவி தேவைப் படுவதால் தீவிர ஆலோசனை யில் ஆட்சி யாளர்கள் உள்ளனர்.

வேளச்சேரி யில் ரவுடிகள் டீம், மற்றவர்களை விட கொஞ்சம் வித்தியாச மானவர்கள். இந்த டீமில் உள்ள ரவுடி, கொலை செய்ததற் காக தங்க மோதிரம் பரிசளிக்கப் பட்டது. 

அடுத்து, அந்த ரவுடி விரும்பிய அனைத்தும் செய்து கொடுக்கப் பட்டது. தற்போது, அந்த ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட் டத்தில் கலந்து கொண்டு போலீஸிடம் சிக்கினார். 

தற்போது, கால், கை உடைக்கப் பட்டு சிறை யிலேயே சிகிச்சை அளித்து வருகிறார் என்கின்றனர் போலீஸார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings