பெங்களூரின் அமாரா தாய்ப்பால் வங்கி !

0
பெங்களூரின் கொதிக்க வைத்து பின் குளிர வைத்து பதப்படுத்தப் பட்ட ஒரே தாய்ப்பால் வங்கி அமாரா. இது 2017ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி துவக்கப்பட்டது. 
பெங்களூரின் அமாரா தாய்ப்பால் வங்கி !
டாக்டர் ஸ்ரீகாந்த் மனிகாந்தி மற்றும் டாக்டர் அன்கித் ஸ்ரீவத்சவா இதை தொடங்கி யவர்கள். டாக்டர் ஸ்ரீகாந்த் மனிகாந்தி புதிதாக பிறக்கும் குழந்தைகள் சார்ந்த பிரிவின் தலைமை டாக்டர். 

போர்டீஸ் லா பீமீயூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் களில் ஒருவர்.

ஆரம்ப காலத்தி லிருந்து சமீப காலம் வரை இவர்கள் 50,000 மில்லி லிட்டர் தாய்ப் பாலை சேகரித்து பதப்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். 

இவற்றில் 34,450 மில்லி லிட்டர் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தை களுக்கு ஏற்கனவே கொடுக்கப் பட்டு விட்டது. 

இது 17 குழந்தை களை காப்பாற்றி சகஜமாக வாழ வைத்துள்ளது. இந்த 50 லிட்டர் பாலை 20 தாய் மார்கள் அன்பளிப்பாக வழங்கி யுள்ளனர். 
டெல்லியி லும் தாய்ப்பால் வங்கி உண்டு. சரி, இவர்கள் இந்த பதப்படுத்தப் பட்ட தாய்ப் பாலை யார் யாருக்கு தருகி றார்கள்? சில குழந்தை களுக்கு பசும்பால் ஒத்துக் கொள்வதில்லை. 

அந்த குழந்தை களுக்கு தருகின்றனர். 32 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு அவை எடை 1.5 கிலோவுக்கு குறைவாக இருக்கு மானால் கொடுக்கிறார்கள். 

சில குழந்தைகள் 26, 28, 30 வாரங்க ளிலேயே பிறந்து விடும். தாய்ப்பால் போதாத நிலையில் வழங்கப் படுகிறது. 

17 குழந்தைகள் இந்த பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை குடித்து தேறின அல்லவா! அவற்றில் இரண்டு ஜோடியினருக்கு தலா 3 குழந்தைகள் பிறந்து, 

தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழல் எழுந்த போது, இந்த தாய்ப்பால் வழங்கப் பட்டது. ஸ்வேதா மற்றும் அன்னப்பா காமத் ஆகிய இருவருமே ஆராய்ச்சி டாக்டர்கள். 

இந்த ஜோடிக்கு ஒரே பிரசவத்தில் வேதா, மந்த்ரா மற்றும் ஸ்லோக் என்ற மூன்று குழந்தைகள் பிறந்த போது அவை தலா 1½ கிலோ எடை இருந்தன. 

இந்த மூன்று குழந்தை களுக்கும் முதல் இரண்டு நாள் தாய்ப்பால் கொடுத்த ஸ்வேதாவால், மூன்றாவது நாளிலிருந்து தருவது கஷ்டமானது. 

இந்த மூன்று குழந்தைகளுக்கும் தினமும் தலா 250 மி.லி பால் தர வேண்டும். அது இயலாத நிலை எழுந்த போது, மருத்துவ மனையின் உதவியை நாடினர். மருத்துவ மனை, ‘அமாரா’வை கை காட்டியது.
முதலில் வாங்க தயங்கி னாலும், பிறகு வாங்கிக் கொடுக்க ஆரம்பித் தனர். இதனால் குழந்தைகள் தேறின. 

இப்படி மொத்த தேவையில் ஒரு பகுதியை வாங்கி ஒரு மாதம் தந்த போது மூன்று குழந்தைகளும் நார்மல் குழந்தைகளாகி விட்டன என்கிறார் காமத். 

இதே போல் சையத் அஜீஸ் அலாமன் மற்றும் அவருடைய மனை விக்கும் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெங்களூர், 

இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த்தில் பிறந்த போது, அவர்கள் அடுத்த 15 நாட்களுக்கு அமாராவின் உதவியை நாடி பதப்படுத்தப் பட்ட தாய்ப்பாலை வாங்கிக் கொடுத்து அவற்றை நார்மல்

குழந்தைகளாக மாற்றினர்.

சமீபத்தில் 26 வாரத்தில் பிறந்த ஒரு புதுக் குழந்தைக்கு கூடுதலாக குடலில் 3 தொற்றுகள் ஏற்பட்ட போது உடனே அதற்கு தாய்ப்பால் வழங்கப் பட்டு பிழைத்தது. 
அமாரா ‘வாடகை தாய்மார்கள்’, தாய்ப்பால் கேட்டால் தருவ தில்லை. தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் இந்த தாய்ப்பால் வங்கிக்கு தேவை கேட்டு தினசரி 3-4 போன் களாவது வருகின்றன.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings