71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்தியர் !

0
சவால்களைச் சந்திக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே இல்லை. அதிலும் நேர்மையான கெடுபிடியான அதிகாரிகள் என்றால், பல முனைகளி லிருந்தும் நெருக்கடிகளைச் சந்தித்தேயாக வேண்டும்.
71 முறை டிரான்ஸ்ஃபர் கண்ட வடஇந்தியர் !
வளைந்து கொடுத்துப் போகத் தெரிந்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பதவி பூமேடை... அல்லா தோருக்கு தீமிதித்தல் போன்றது. 

சகாயம் ஐ.ஏ.எஸ் போலவே வட நாட்டிலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, அரசியல் வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

பிரதீப் காஸ்னி என்ற பெயரைக் கேட்டாலே, ஹரியானா மாநில ஊழல் பேர்வழிகள் அலறுவார்கள். முதலமைச்சரே பேசினாலும் வளைந்து கொடுக்கும் வழக்கம் பிரதீப் காஸ்னி க்குக் கிடையாது. 

`சரி' என்று உணர்ந்தால் மட்டுமே இவரிட மிருந்து ஃபைல்கள் நகரும். இல்லை யென்றால், ஃபைல் மூடப்பட்டு விடும். கெடுபிடி யான ஆபீஸரை வைத்துக்கொள்ள எந்த முதலமைச்சர் தான் விரும்புவார்? 

விளைவு... பிரதீப் காஸ்னி 34 ஆண்டுகால சர்வீஸில் 71 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டார். 
சென்னை விமான நிலைய த்தின் கண்ணாடிகள் உடைவதை நாம் எண்ணிக் கொண்டிருப்பது போல், பிரதீப்பின் டிரான்ஸ்ஃபரை எண்ணிக் கொண்டிருக் கிறார்கள் ஹரியானா மக்கள். 

இந்தியா விலேயே அதிக முறை டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர் தான்! ஒரு துறையில் ஆறு மாதம் இருந்து விட்டால், இவரைப் பொறுத்த வரை அது பெரிய விஷயம். 

பிரதீப்பை டிரான்ஸ்ஃபர் செய்வதில் மட்டும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் கைகோத்துச் செயல் பட்டன.  குறிப்பாக பாரதிய ஜனதா அரசு, பிரதீப்பை பணிமாற்றம் செய்வதில் புதிய சாதனையே நிகழ்த்தியது. 

2014-ம் ஆண்டு ஹரியானா முதலமைச் சராக மோகன்லால் கட்டார் பதவி யேற்ற பிறகு, 2016-ம் ஆண்டுக்குள் 12 முறை பணிமாற்ற த்தைச் சந்தித்தார் பிரதீப். 

`ஊழலுக்கு எதிரான கட்சி' என்று கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா அரசில், நேர்மையான அதிகாரி சந்தித்த அவலம் இது. 
செப்டம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை இடமாற்றத்தை எதிர் கொண்டார் பிரதீப். எத்தனை டிரான்ஸ்ஃபர் வந்தாலும் நேர்மையை மட்டும் அவர் விட்டு விடவில்லை. 

மடியில் கனம் இல்லாத தால் எந்த இடத்துக்கு மாற்றி னாலும் அங்கே போய் திறம்படச் செயலாற்று வார்.

வட நாட்டு சகாயம் அசோக் கெம்கா பிரதீப் காஸ்னி ஓய்வு பெற ஆறு மாதங்கள் இருக்கும் போது, இன்னும் குரூரமாக `இவரை என்ன செய்யலாம்?' என்று ஆலோசித்தது கட்டார் அரசு. 

இல்லாத இலாகாவு க்கு அவரை மாற்றியது. அதாவது, ஹரியானா மாநில நிலம் கையகப் படுத்தும் துறைக்கு அவரை ஸ்பெஷல் அதிகாரி ஆக்கியது. பிரதீப், தன் புதிய அலுவல கத்துக்குச் சென்றார். 

அங்கே எந்த அலுவலரும் இல்லை; ஃபைல்களும் இல்லை. அது அரசு அலுவலகம் போலவே காணப்பட வில்லை. பல நாள்கள் அலுவலகம் சென்ற வருக்கு ஒன்றுமே புலப்பட வில்லை. 
அரசிடம் கேட்டால் எந்த பதிலும் இல்லை. முடிவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அவர் அந்த அதிர்ச்சி யான தகவலைப் பெற்றார்.

அதில் ஹரியானா அரசு, 2008-ம் ஆண்டே இந்தத் துறையைக் கலைத்து விட்ட தாகக் கூறப் பட்டிருந்தது. 

இல்லாத துறைக்கு ஸ்பெஷல் ஆபீஸராக இவரை பணியில் அமர்த்தி, ஆறு மாதங்களுக் கான சம்பளத்தையும் வழங்காமல், கட்டார் அரசு பழி வாங்கியது. 

மார்ச் முதல் தேதி, சம்பளம் பெறாமலேயே பணியி லிருந்து அவர் விடையும் பெற்றார். பதவியில் இருக்கும் போதும் போராட்டம் தான்... 

ஓய்வு பெற்ற பிறகும் சம்பளத்துக் காகப் போராட வேண்டிய நிலை. ஐ.ஏ.எஸ் அலுவலர் நிர்வாக ஆணையத் திடம் பிரதீப் புகார் அளித்துள்ளார்.
இவர் மட்டுமல்ல, இவரின் தந்தை தரம்சிங் கூட போராட்டக் காரர் தான். ஹரியானா வில் தொழிற் சங்கத் தலைவராக இருந்தவர். 

பிரதீப் இளைஞராக இருந்த போது தந்தையுடன் பல்வேறு போராட்டங் களில் பங்கேற்றிருக்கிறார். இந்திரா காந்திக்கு எதிராக உள்ளூர் பத்திரிகை களில் தொடர்ந்து கட்டுரையும் எழுதி வந்தார். 

1984-ம் ஆண்டு ஹரியானா சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அரசு அதிகாரி யானார். தொடர்ந்து 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்த்தப் பட்டார். என் தந்தை எனக்குக் கற்று கொடுத்தது நேர்மை மட்டும் தான். 

கை சுத்தத் துடன் விடை பெறுகிறேன் என்று பெருமை யுடன் கூறும் பிரதீப்பை, ஹரியானா வைச் சேர்ந்த மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா விரட்டி வந்து கொண்டிருக் கிறார். 
சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்தேரா, நிலம் வாங்கிக் குவித்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தது இவர் தான். அசோக் கெம்கா, 24 ஆண்டு களில் 51 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டுள்ளார்.

இவர்களைப் போன்ற அரசு அதிகாரி களால் தான் மக்கள் இப்போதும் நம்பிக்கை யுடன் நடமாட முடிகிறது!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings