மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட முடிவு - உரிமையாளர்கள் !

0
க்யூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் அதிகப் படியான கட்டணம் வசூலிப்பதை குறைக்க  க்கோரி தமிழ்த் 

மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட முடிவு - உரிமையாளர்கள் !
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1ம் தேதி முதல் புது திரைப் படங்களை வெளியிடுவ தில்லை என முடிவு செய்தது. 

கடந்த இரண்டு வாரங்களாக எந்தப் புது திரைப் படங்களும் தமிழில் வெளி யாகாமல் இருந்து வருகிறது.

இந்நிலை யில் தமிழ்நாடு திரைப்பட திரையரங்கு உரிமை யாளர் சங்கத்தின் பேச்சு வார்த்தை கூட்டம் இன்று சென்னை ரோகிணி திரை யரங்கில் நடை பெற்றது. 

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட உரிமை யாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வத்திடம் பேசுகை யில், 

"தற்போது தமிழக த்தில் மட்டும் உள்ள 8% கேளிக்கை வரி முற்றிலு மாக ரத்து செய்ய வேண்டும். 
இருக்கை களைக் குறைக்க அனு மதிக்கவும், லைசென்ஸ் புதுப்பிக்கும் முறையை ஒரு வருடத்தி லிருந்து 3 வருடமாக உயர்த்த வழிவகை செய்ய வேண்டும், 

திரையரங்கு பராமரிப்புக் கட்டணம் (TMC) - A/C திரையரங்கு களுக்கு 5 ரூபாய் எனவும் Non A/C திரையரங்கு களுக்கு 3 ரூபாய் எனவும் 

வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட அடிப்படை யில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். 

இது தொடர்பாக நாளை அமைச்சரைச் சந்தித்து பேச உள்ளோம். ஒரு வார காலத்திற் குள் இந்த அரசாணை 
பிறப்பிக்காத பட்சத்தில் மார்ச் 16 முதல் கோரிக்கை நிறை வேறும் வரை திரையரங்கு களை மூடுவது என முடிவெடுத் துள்ளோம். 

தயாரிப் பாளர்கள் சங்கத்து க்கும் எங்களு க்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. 

எங்களது போராட்டம் தமிழக அரசுடன் தானே தவிர தயாரிப்பாளர் களுடன் இல்லை" என்றும் அவர் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)