முத்தலாக் தடைச் சட்டம்... பிரதமர் மோடியின் கவனத்துக்கு !

0
பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, சைப்ரஸ், துனீஸியா, அல்ஜீரியா, மலேசியா, இலங்கை, இரான், ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சூடான், மொராக்கோ, எகிப்து, இராக், புரூனே. 
முத்தலாக் தடைச் சட்டம்... பிரதமர் மோடியின் கவனத்துக்கு !
இவை அனைத்தும் இதுவரை முத்தலாக் என்னும் இஸ்லாமிய திருமண விவாகரத்து முறை தடை செய்யப்பட்ட நாடுகள். 'உடனடி முத்தலாக் என்பது தண்டனைக் குரியது' 

என்கிற புதிய சட்ட மசோதாவை உருவாக்கி யுள்ள இந்தியா, முத்தலாக் முறையை ஏற்கெனவே தடை செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர இருக்கிறது. 

இந்த மசோதா மக்களவை யில் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்க ளவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் களின் எதிர்ப்பால் இன்னும் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளது.

பட்ஜெட் கூட்ட த்தொடர் தொடக்கம்

மத்திய பி.ஜே.பி. அரசின் இந்தச் சட்டம், விவாகரத்து என்பதையே தண்டனைக் குரியதாக மாற்றுகிறது என்று 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இன்னும் மாநிலங்க ளவையில் நிறை வேறாத சூழல் நீடித்து வருகிறது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளன்று பத்திரிகை யாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். 

இந்தச் சட்டத்தின் பின்னணி யில், அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாக்கும் முத்தலாக் மசோதா போன்ற விவகாரங் களில் அரசியல் செய்யத் தேவை யில்லை. 

இந்த மசோதா நிறை வேற்றப் பட்டால் அது நிச்சயம் இஸ்லாமியப் பெண்களுக் கான புத்தாண்டுப் பரிசாக இருக்கும்" என்று குறிப்பிட் டுள்ளார். 

ஆனால், உண்மை யிலேயே இந்தச் சட்ட மசோதா புத்தாண்டுப் பரிசாக இருக்குமா? அதற்கு முன்பு, நீதிமன்றப் படியேறிய முக்கிய முத்தலாக் வழக்குகள் சிலவற்றை கவனிப்போம். 

நாடே பரபரப்பாகப் பேசிய சாயிரா பானு, முத்தலாக் விவகாரத்தில் அவரின் கணவர் ரிஸ்வான் அகமது, 'முத்தலாக் நாமாவை' அவருக்குத் தபால் வழியாக அனுப்பி யிருந்தார். 
சமூகவியல் பட்ட தாரியான சாயிரா, இந்த 'தலாக் - இ - பாதத்' எனப்படும் அவசர முத்தலாக் கிற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தை அணுகினார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 வயதான அஃப்ரீன் ரஹ்மானுக்கும், அஞ்சல் வழியாக 'முத்தலாக்' அனுப்பப் பட்டது. 

அஃப்ரீன் ரகுமான்சாயிரா பானுவிற்குச் சாதாரண அஞ்சலில் சென்ற முத்தலாக், அஃப்ரீனுக்கு அவசர அஞ்சலில் சென்றது. இந்த முத்தலாக் முறைக்கு எதிராக அவரும் நீதிமன்றத்தை நாடினார்.

கேரள மாநிலம் கோட்டய த்தைச் சேர்ந்த 21 வயதான பல் மருத்துவ மாணவிக்கு அவரின் கணவர், துபாய் சென்ற மூன்று வாரங்களில் 'வாட்ஸ் அப்' வழியாக முத்தலாக் அனுப்பினார். 

துபாய் சென்ற பிறகு தன்னைத் தொடர்பு கொள்ளாத கணவருக்குத் தொடர்ந்து அலைபேசியில் அந்தப் பெண் அழைப்பு விடுத்த சூழலில் திடீரென ஒருநாள் கணவரிட மிருந்து ஒரு வாட்ஸ் அப் செய்தி வருகிறது. 

அதில், நீ ஏன் எனக்கு தினமும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டிருக் கிறாய்? நமக்கு ஆப்பிள் பழம் பிடிக்கும் என்பதற்காக ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பது இல்லையே. 
வேறு பழங் களையும் விரும்பிச் சாப்பிடுகிறோமே. அதனால், 'தலாக்...தலாக்...தலாக்' என முத்தலாக் தெரிவித்திருக்கிறார். 

இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில், திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தனியோர் அங்க மாகவே இருக்கிறது. 

மணமான இஸ்லாமியத் தம்பதியர் பிரிய வேண்டிய சூழலில், ஆண் 'தலாக்' கொடுக் கவும், பெண்கள் 'குலா' கொடுக்கவும், தனிநபர் சட்டம் அனுமதி யளிக்கிறது. 

தற்காலத்தில் வாய் மொழி யாகவோ, எழுத்து வழியாகவோ அல்லது ஈ-மெயில், சாட் மூலமா கவோ ஆண்கள் முத்தலாக் கொடுக் கிறார்கள். 

பெரும் பாலும் உடனடி விவாகரத்து வேண்டும் ஆண்கள் இந்த முத்தலாக் முறையைப் பின்பற்று கிறார்கள். 

கடந்த 2017, ஆகஸ்ட் 22-ல் தான் உடனடி முத்தலாக் முறை சட்டத்தி ற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. 

பொதுவாக தலாக் அஹசன் என்னும் முறையை தான் இஸ்லாமி யர்கள் பின்பற்ற வேண்டும். அதாவது மூன்று பருவங் களாகப் பிரித்து, ஓர் ஆண் தனது மனைவி யிடம் தலாக் கொடுக்கலாம். 
இரண்டாவது பருவத் திற்குள் ஒருவேளை அவரது மனம் மாறும் சூழலிலோ அல்லது அந்தப் பெண் கருவுறும் சூழலிலோ தலாக் திரும்பப் பெறப் படுகிறது. 

ஆணோ பெண்ணோ தலாக் கொடுக்கும் நிலையில், அதற்கான காரண த்தைக் கூற வேண்டிய தேவை யில்லை. 

ஒரு வேளை காரணம் கூற வேண்டிய நிலையில், பெண்களைப் பொறுத்த மட்டில், நான்கு வருடங் களாகத் தனது கணவரின் இருப்பிடம் தெரிய வராத சூழலில்..., 

இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்தப் பெண்ணின் வாழ் வாதாரத் திற்கான எந்தவிதத் தேவை யையும் அந்த ஆண் நிறைவு செய்யாத நிலையில்..., 

ஏழு வருடங்களுக்கும் மேலாக ஆண் சிறையில் இருக்கும் சூழலில்..., அந்தக் கணவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தகுதி யற்றவராக இருக்கும் நிலையில்..., 

தனது கணவருக்கு வேறொரு மனைவி இருக்கும் நிலையில் சொல்லப் பட்டிருப்பது போல 
தன்னை அந்த மனைவி க்குச் சரிசமமாக நடத்தாதச் சூழலில்..., என்பது போன்ற சில காரணங் களின் அடிப்படையில் அவர்கள் குலா கொடுக்க லாம்.

சல்மா"பல ஆண்டு காலப் பழைமை யான இஸ்லாமியச் சட்டத்தில் உடனடி முத்தலாக் முறை என்பது, 

பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் தடை செய்ய பட்ட ஒன்று. அது இஸ்லாத்து க்கு எதிரானதும் கூட... என்கிறார் எழுத்தாள ரும், கவிஞருமான சல்மா.

அவர் கூறுகையில், இஸ்லாமிய வாழ்வியல் நெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் மேற்கத்திய நாடுகளில் கூட, இந்த உடனடி முத்தலாக் முறை என்பது கிடையாது. 

இந்தியா வில் மட்டும் தான், இது ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் என்பதால் ஆண்களின் வசதிக்கேற்ப, 

அவர்கள் உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிலையில், உடனடி முத்தலாக் கொடுத்து விட்டு நகர்ந்து விடுகி ன்றனர். 

ஆனால் உண்மையான 'தலாக்' என்பது அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குடும்பத் துக்கும் அவர்களுக்கான கால அவகாசத்தை அளிக்கக் கூடியதாக இருந்தது. 
வீட்டில் உள்ள பெரியவர்கள் சாட்சியாகத் தான் தலாக் கொடுக்க வேண்டும். 

ஆண் ஒரு முறை தலாக் கொடுத்து விட்டு, சம்பந்தப் பட்ட பெண்ணின் மாதவிடாய் காலம் வரும் வரை காத்திருந்து தான் இரண்டாவது தலாக்கை கொடுக்க வேண்டும். 

மூன்றாவது தலாக் கொடுக்க அவளது அடுத்த மாதவிடாய் பருவம் வரும் வரைக் காத்திருக்க வேண்டும். 

இதற்கிடையில் அந்தப் பெண் கருவுறும் சூழலில் தலாக் திரும்பப் பெறப்படும். 

இடைப்பட்ட காலத்தில் அந்தக் குடும்பத்தின் பெரியவர்கள், அந்த ஆணின் மனதை மாற்ற முயற்சி செய்வ தற்கும் இஸ்லாமியத் தனிநபர் சட்டம் அனுமதி தருகிறது. 

அதாவது திருமணம் (எ) நிக்காஹ் என்பது எந்த அளவிற்கு இஸ்லாம் மதத்தில் மதிக்கப் படுகிறதோ அதே அளவிற்கு அந்தத் தம்பதி பிரிவதற்கும் அனுமதி தரப்பட்டு அவர்களின் அந்த முன்னெடுப்பு மதிக்கப் படுகிறது. 
சேர்ந்து வாழும் அதே அளவிற் கான உரிமையைப் பிரிந்து செல்வதற்கும் தருகிறது இஸ்லாம். 

ஆனால், இந்திய அரசு தற்போது கொண்டு வர விருக்கும் முத்தலாக் தடைச் சட்டம், விவாகரத்துக் கோரு வதையே தண்டனை தரக்கூடிய செயலாகப் பார்க்கிறது. 

'தனக்கு விவாகரத்து என்கிற பெயரில் அநீதி இழைக்கப் படுகிறது' என்று ஒரு இஸ்லாமியப் பெண் நீதிமன்றத்தை அணுகும் போது... 

அந்த ஆணுக்கு மூன்று வருடகாலம் சிறைவாசம் வழங்கி தீர்ப்பளிப்பது எந்த வகையில் நீதியாக அமைய முடியும்? 

எந்த வித இஸ்லாமியக் குழுக்களையும் கலந்தா லோசிக்காமல் அரசே எடுத்திருக்கும் இந்த முடிவு ஏற்கெனவே மதவாதத்தின் பல முகங்களை மக்களிடையே திணித்து வரும் அரசின் மற்றொரு முகமாகவே தெரிகிறது. 

அண்மையில் இஸ்லாமிய தனிநபர் சட்ட அமைப்புக் குழு, இந்த உடனடி முத்தலாக் முறைக்கு எதிராக 'நிக்காஹ் நாமா' எனப்படும் 
திருமண ஒப்பந்தத்திலேயே மாற்றம் கொண்டு வர இருப்பதாக அறிவித்தது ஒரு வகையில் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. 

உண்மை யிலேயே மோடி அரசு, இஸ்லாமியப் பெண்களு க்குப் புத்தாண்டுப் பரிசை அளிப்பதாக இருந்தால், 

அந்த ஒப்பந் தத்தில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியை வரவேற்று அதனை துரிதப் படுத்தி யிருக்க வேண்டும்” என்றார்.

இஸ்லாமியத் தரப்புகளின் இந்தக் கருத்தையும் கவனத்தில் கொண்டு மோடி அரசு தனது புத்தாண்டுப் பரிசைச் சரி பார்த்துக் கொடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)