எய்ம்ஸ் மருத்துவமனை இறுதி செய்யாதது ஏன்? ஸ்டாலின் !

0
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப் படுவதற்கான இடத்தை மத்திய - மாநில அரசுகள் இறுதி செய்யாதது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை இறுதி செய்யாதது ஏன்? ஸ்டாலின் !
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக் கிழமை) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப் படும்" 

என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப் பட்டிருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது.

தமிழக மக்களுக்கு உலகத் தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் மூன்று நிதிநிலை அறிக்கைகள் 

கடந்து சென்று விட்ட நிலையி லும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கை யின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற் காக வெளியிடப் பட்ட 

பட்ஜெட் அறிவிப்பு களை நிறை வேற்றுவதில் கூட மத்திய பாஜக அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.
தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்ட த்தில் உள்ள பெருந்துறை, 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து இடங்களை எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பி யிருக்கிறது.

இந்த ஐந்து இடங்களிலும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியி லிருந்து 25 ஆம் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பி விட்டது. 

அதன்பிறகு, தேர்வு செய்யப் பட்ட இடங்க ளுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து 

மத்திய அரசு கேட்ட கேள்வி களுக்கு மாநில த்தில் உள்ள அதிமுக அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.

இந்நிலை யில், சென்னை உயர் நீதிமன்ற த்தின் மதுரைக் கிளையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 

எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தர விட்டு விட்டது.
ஆனால், இன்று வரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப் படுவதற்கான இடத்தை மத்திய - மாநில அரசுகள் இறுதி செய்ய வில்லை.

"மாநில நலன்களுக் காக மத்திய அரசுடன் ஒத்துப்போகிறோம்", என்று அரசு செலவில் விழா நடத்தி, வீண் தம்பட்டம் அடித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக அரசு, 

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனையைக் கூட கொண்டு வர முடியாமல் செயலிழந்து நிற்கிறது.

தங்களுடைய பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் எதிராளிகளைப் பழி வாங்கவும் பிரதமர் மோடி காட்டி 

வரும் கருணையைப் பயன் படுத்திக் கொள்ளும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் குழுவினர், அதை தமிழக நலனுக்காகப் பயன்படுத்த ஏன் தயங்கு கின்றனர் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும், என்று 2017-18 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப் பட்ட அறிவிப்பு செயல் வடிவம் பெற்று விட்ட நிலையில், 
அதற்கு முன்பே 2015-16 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத் திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப் படாமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் நடத்தும் நாடகமே காரணம்.

தமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்று வதில் இங்குள்ள அதிமுக அரசுக்கோ, சுகாதாரத் துறை 

அமைச்சருக்கோ சிறிதும் அக்கறை யில்லை என்பது இதன் மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

தமிழகத்தில் அதிமுக அரசு வெளியிட்ட 110 விதியின் கீழான அறிவிப்புகள் போல், மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப் பட்ட அறிவிப்பும் இன்று வரை 

அமலுக்கு வராமல் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக மக்களின் நலன் மீது மத்திய பாஜக அரசுக்கும் எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய நிதி நிலை அறிக்கை யில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்து மனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, 
மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளு மன்றத்தில் அதிமுகவிற்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதை 

உடனே செயல் படுத்துவதற் கான உத்தரவை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் 

தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த முயற்சிக்கு மாநிலங்க ளவையில் உள்ள திமுக உறுப்பி னர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கு வார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு வேளை, பலத்தை பயன் படுத்த அதிமுக அரசு தவறினால், 'ஒன்று க்கும் உதவாத ஒதியமரம் போன்றது தான் அந்த பலம்', 

என்று தமிழக மக்கள் முடிவு செய்து விடுவார்கள் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்பு கிறேன்". இவ்வாறு ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)