தலைமைச் செயலகத்தில் அதிர்ச்சி... அரசு ஊழியர்கள் !

0
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
தலைமைச் செயலகத்தில் அதிர்ச்சி... அரசு ஊழியர்கள் !
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. இதனால், வழக்கத்தை விடக் கூடுதலான போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 

போலீஸ் பாதுகாப்பை யும் தாண்டி, வெளி மாவட்டங் களிலிருந்து வந்த அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத் துக்குள் நுழைந்த சம்பவம் போலீஸா ருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தமிழ்நாடு வணிக வரித்துறை யில் பல ஆண்டு களாகப் பதவி உயர்வு வழங்கும் சீனியாரிட்டி யில் குளறுபடி இருந்து வருகிறது. 

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வணிக வரித்துறை சங்கங்கள் சார்பில் முதல்வரு க்கும் துறை அமைச்சரு க்கும் உயரதி காரிகளு க்கும் 

பல்வேறு மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இருப்பினும், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்பட வில்லை. 
சட்டப் பேரவைக் கூட்டம் நடந்து வரும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கை மனுவைக் கொடுக்க வணிக வரித்துறை சங்கங் கங்களின் கூட்டு நடவடி க்கைக் குழு முடிவு செய்தது. 

கூட்டம் நடப்பதால் சட்டப் பேரவை க்குள் செல்ல புதிய யுக்தியை வணிக வரித்துறை யினர் கையாண்டனர். ஒவ்வொரு வரும் தனித் தனியாகத் தலைமைச் செயல கத்துக்குள் செல்ல அனுமதி பெற்றனர். 

போலீஸா ருக்குத் தெரியாமல் 200-க்கும் மேற்பட்ட வர்கள் தலைமைச் செயல கத்துக்குள் நுழைந்தனர். பிறகு, அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஒன்றாக ஆலோசனை நடத்திக் கொண்டிரு ந்தனர்.

கூட்டத்தைப் பார்த்த போலீஸார், உடனடியாக அவர்களிடம் விசாரித்த போது தான், முதல்வரை சந்திக்க கூட்டமாக வந்திருக்கும் தகவல் தெரிய வந்தது. 

இது, பாதுகாப்புப் பணியி லிருந்த போலீஸாரு க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, முதல்வரைச் சந்திப்பது தொடர்பாக வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு 
நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜனார்த்தனன், லட்சுமணன், ஜெயராஜ ராஜேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

இந்த முறையாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்களின் பிரதான கோரிக்கை யான சீனியாரிட்டி குளறுபடியை நீக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர் பார்ப்பில் வணிக வரித்துறை யினர் உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings