ஊதிய உயர்வு... போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு !

0
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் தமிழகம் முழுவதும் போக்கு வரத்து ஊழியர்கள் தாமாக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
ஊதிய உயர்வு... போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு !
அரசு போக்குவரத்து ஊழியர் களுக்கு அடிப்படை ஊதியத்தில் 2.57 சதவீத உயர்வு அளிக்கா விட்டால் ஜனவரி 3-ம் தேதிக்குப் பிறகு போராட்டம் அறிவிக்க வுள்ளதாக தொழிற் சங்கங்கள் கூட்டாக அறிவித் திருந்தன. 

இந்நிலையில் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் தமிழகத் தின் பல மாவட்டங் களில் அறிவிக்கப் படாத வேலை நிறுத்தம் தொடங்கி யுள்ளது.

போக்கு வரத்து ஊழியர் களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந் தத்தில் 2.44 சதவீத ஊதிய உயர்வு அளிப்பது குறித்து குரோம்பேட்டை 

பயிற்சிப் பள்ளி வளாகத்தில் டிச.27 அன்று தொழிற் சங்கங்களுடன் அமைச்சர் என்.ஆர். விஜய பாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தினார். 

இந்த உயர்வு போதாது 2.57 (3 ஆண்டு களுக்கு) சதவீத ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டும் என தொழிற் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.
இது குறித்து ஊதிய உயர்வு தொடர்பாக மீண்டும் தமிழக முதல்வருடன் பேசி ஒரு சுமுக முடிவை 

மேற்கொள்வ தாக அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் உறுதி அளித்து மீண்டும் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். 

பல்வேறு கோரிக்கை களை வைத்து போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மே மாதம் நடத்திய வேலை நிறுத்தத் துக்குப் பிறகு, 

அவர்களின் கோரிக்கைகள் மீது 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு உறுதி அளித்தது.

நிலுவைத் தொகை ரூ.1,250 கோடி வழங்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து ஊழியர் களுக்கு புதிய ஊதியம் நிர்ணயிக்க வில்லை. 
ஓய்வூதியர் களுக்கு நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வில்லை. கடந்த 6 மாதங்களில் ஊழியர் களின் பணம் ரூ.1,500 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. 

எனவே, போக்கு வரத்து ஊழியர் களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைப் பணத்தை உடனடி யாக வழங்க வேண்டும், 

போக்கு வரத்து கழகங்களின் வரவு – செலவுக்கான இடைவெளியை அரசே ஏற்று மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்துப் போராட்டம் நடத்தினர்.

பல சுற்று பேச்சு வார்த்தைக்கு இடையே டிசம்பர் மாதம் கோரிக்கை களை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். 

அப்போது பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர் டிச.27 க்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனால் ஆத்தி ரமடைந்த ஊழியர்கள் பல்லவன் இல்லத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் டிச.27 அன்று நடந்த பேச்சு வார்த்தையில் அரசு தரப்பு 2.4 சதவித ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்க தொழிற்சங்க தரப்பு 2.5 என 
கோரிக்கை வைக்க முதல்வருடன் பேசி விட்டு அறிவிக்கிறேன் என ஜன.3-க்கு பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப் பட்டது.

இதனிடையே பத்து சுற்றுக்கு மேல் பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படாத நிலையில் தொழி லாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். 

இன்று பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடியாவிட்டால் வேலை நிறுத்தம் என்ற எண்ணத்துக்கு வந்து விட்டனர். 

இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பணிமனை களில் தொழிலா ளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதால் பேருந்துகள் இயக்கப்பட வில்லை.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தமும் பல பணிமனை களில் தொடங் கியது. சென்னையில் திருவான்மியூ ரில் பேருந்து களை நிறுத்தி விட்டுச் சென்று விட்டனர். 
இதனால் பொது மக்கள் அவதி யடைந்தனர். தமிழகத்தில் பல மாவட்டங் களில் போக்கு வரத்து ஊழியர்கள் பணிமனைக்கு பேருந்தை திருப்பி வருகின்றனர். 

இதனால் பல மாவட்டங் களில் அறிவிக்கப் படாத போக்குவரத்து வேலை நிறுத்தம் தொடங்கியது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டதால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து தொழிலாளர் களுடனான பேச்சு வார்த்தை இழுபறி நீடிப்பதால், கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 

பேருந்து நிலையங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிக ளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

ஆனாலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடப்பதால் அதன் முடிவை ஒட்டியே வேலை நிறுத்தம் முழுமை யாக நடக்குமா அல்லது நிறுத்தப்படுமா என்பது தெரிய வரும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings