அகிலா என்கிற ஹாதியா யார்?

0
நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக் கப்படும் நபராக உருவெடுத் துள்ளார் ஹாதியா. 
அகிலா என்கிற ஹாதியா யார்?
விரும்பி திருமணம் செய்து கொண்ட தாக கூறும் ஒருவரை, மண வாழ்க்கை யில் இருந்து நீதிமன்றம் விலக்கி வைத்தது ஏன்?

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கே.எம். அசோகன் - பொன்னம்மா தம்பதியின் ஒரே மகள் அகிலா. 
அசோகன் தம்பதி இந்து மதத்தில் தீவிரப் பற்றுக் கொண்ட வர்கள் எனக் கூறப்படு கிறது. 

உள்ளூர் அரசுப் பள்ளி யில் ப்ளஸ் டூ வரை படித்த அகிலா, கடந்த 2010 ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி யில் சேர்ந்தார்.

அங்கு பயின்ற கேரள மாநில த்தைச் சேர்ந்த ஜெசீலாவும், அவரது சகோதரி ஃபசீனாவும் அகிலா வுக்கு தோழிக ளானார்கள். 

பின்னர் விடுதியில் இருந்து வெளியேறி வீடு எடுத்து தங்கி யிருந்த போது ஜெசீலாவும்,  

ஃபசீனாவும் ஐந்து வேளை தொழுகை யில் ஈடுபடு வதைப் பார்த்த அகிலாவு க்கு, இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்ட தாக கூறப்படு கிறது. 

அந்தக் காலக் கட்டத்தில் இஸ்லாமிய வழக்கங் களைப் பின்பற்றத் தொடங்கிய அகிலா, 

கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், 2015 செப்டம்பரில் இஸ்லாம் மதத்தை தழுவு வதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கை களை தொடங்கினார். 

அப்போது அகிலா என்ற பெயரை ஹாதியா என்று அவர் மாற்றிக் கொண்ட தாகக் கூறப்படு கிறது.
இந்தத் தருணத்தில் தனது வீட்டில் நடந்த மத ரீதியிலான சடங்கு ஒன்றில் அகிலா பங்கேற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 
வழுக்கை விழக் காரணம் என்ன? தெரியுமா?
இத்தகைய சூழலில், இஸ்லாமிய தோழிகளின் வீட்டில் தனது மகள் அகிலா இருப்பதாக கடந்த ஆண்டு உள்ளூர் காவல் நிலைய த்தில் 

அசோகன் புகார் அளித்ததை அடுத்து அந்தப் பெண்களின் தந்தை அபுபக்கர் கைது செய்யப் பட்டார்.

இந்தத் தருண த்தில் கேரள உயர் நீதிமன்றத் தில் ஆட் கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்த அசோகன், 

தனது மகளை கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்து விட்டதாகக் கூறியி ருந்தார். 

அப்போது நீதிமன்ற த்தில் ஆஜரான அகிலா என்ற ஹாதியா, தனது விருப்ப த்தின் பேரிலேயே இஸ்லாம் மதம் பற்றி அறிந்து வருவ தாகவும், 

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த ஸைனபா என்ற பெண்ணுடன் தங்கியி ருப்பதாகவும் கூறியி ருந்தார். 

பிறகு 2016 ஆகஸ்ட் மாதம் கேரள உயர் நீதிமன்ற த்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்த அசோகன், 

தனது மகளை கட்டாயப் படுத்தி சட்டத் திற்குப் புறம்பான முறை யில் மதமாற்றம் செய்து விட்டதாக வும், அவரை மீட்டுத் தரும் படியும் கோரியி ருந்தார். 

தனது மகள் அகிலாவை சிரியா விற்கு கடத்தி, அவரை ஐஎஸ் பயங்கர வாத அமைப்பில் சேர்க்க திட்ட மிட்டுள்ள தாகவும் அசோகன் மனுவில் குறிப் பிட்டிருந்தார்.

இது போன்ற சூழலில், ஹாதியா கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஷாகின் ஜெகான் என்ற இஸ்லாமியரை மணந்தார். 

இதற்கு எதிராக அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 

அந்தத் திருமணம் சந்தேக த்திற்கு இட மளிக்கும் வகையில் நடந்தி ருப்பதாகக் கூறி, 
அது சட்ட ரீதீயாக ஏற்கத் தக்கதல்ல என கடந்த மே மாதம் அறிவித்தது. பின்னர் ஹாதியா அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப் பட்டார்.
மொசாட் - 6 நாட்களில் 4 அரபு நாடுகளைத் தோற்கடித்த இஸ்ரேலின் யுத்தம் !
இதற்கு எதிராக ஷாகின் ஜெகான் உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடுத்தார். 

இதனை விசாரித்த நீதிபதிகள், ஹாதியா - ஜெகானின் திருமணம் செல்லாது என்று அறிவிக்க ‌கேரள உயர் நீதிமன்ற த்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறினர். 

இருப்பி னும், கேரளாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு க்கு ஆதரவான செயல்கள் 

ஏதும் நடை பெறுகிறதா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி தேசிய புலனாய்வு அமைப்பைக் கேட்டுக் கொண்டனர். 

இதற்கு எதிராக கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பிரமாணப் பத்திரத்தில், 

இவ்வழக்கை விசாரிக்கும் ஆற்றல் காவல் துறைக்கு உள்ளது என்றும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை தேவை யில்லை எனவும் கூறியது.

இதை யடுத்து ஹாதியா வின் கணவர் ஷபின் ஜகான் உச்ச நீதிமன்ற த்தில் மேல் முறையீடு செய்தார். 

அதில், “24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், 
மொசாட் உருவான வரலாறு - அமெரிக்காவை எப்படி கைக்குள் போட்டது மொசாட்?
எந்த மத நம்பிக் கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது” என்று கூறியி ருந்தார். 

அகிலா என்கிற ஹாதியா யார்?
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசார ணைக்கு எடுத்துக் கொண்டது. 

ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜரா யினர்.
E-Sim என்றால் என்ன? தெரியுமா?
நீதி மன்றம் திருமண த்தை ரத்து செய்தது துரதிருஷ்ட வசமானது. சம்பந்தப் பட்ட பெண்ணை சந்திக்க கணவரு க்குக் கூட அனுமதி வழங்க வில்லை. 

அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அந்த பெண்ணின் வீட்டை சுற்றி போலீஸார் உள்ளனர். 

அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்க வில்லை என கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் வாதிட்டனர்.

பெண்ணின் தந்தை சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார். “சில சதி வேலை களால் அகிலா மனரீதியாகப் பாதிக்கப் பட்டுள்ளார். 

பெண்ணை ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டால் அதில் பெண்ணின் தந்தைக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை” என்றார். 

பல கட்டங் களை கடந்து வந்த இவ்வழக்கு உச்ச நீதிமன்ற த்தில் நவம்பர் 27ம் தேதி மீண்டும் விசார ணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற த்தில் விசாரணை க்கு வந்த போது, நீதிபதிகள் ஹாதியா வின் விருப்ப த்தைக் கேட்டனர். 
இணையத்தில் நடப்பது என்ன? உண்மையை வெளிப்படுத்தும் ‘Hacker' சிவா !
அவர் தனக்கு விடுதலை யும் சுதந்திர மும் வேண்டும் எனக் கூறினார். தான் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருந் ததாகவும் தெரிவித்தார். 

படிப்பைத் தொடர விரும்பு கிறாரா என நீதிபதிகள் கேட்டதற்கு நிச்சய மாக என ஹாதியா பதிலளித் திருந்தார். 

இதனைத் தொடர்ந்து அவரை சேலம் ஹோமியோபதி கல்லூரி யில் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யு மாறும் 

அவருக்கு விடுதியில் இடம் தருமாறும் கல்லூரி க்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. 
அவருக்கு கல்லூரி முதல்வரை பாது காவலராக நியமித்தும் உத்தர விடப் பட்டது.

தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி யில் நடை பெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் ஹாதியா பேசும் போது, 

“எனக்கு பிடிக்காத வர்களுடன் கடந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து வந்தேன். எனது பெற்றோர்கள் என்னை மனமாற்றம் செய்ய முயற்சித் தார்கள். 

6 மாதமாக செய்தி தாளையோ, தொலைக் காட்சிகளை யோ பார்க் காமல், இருட்டில் வாழ்ந்து வந்தேன். 

என் கணவரை கூட சந்திக்க முடியாமல் இருந்தேன். என் விருப்பம் எல்லாம் விரும்பி யவர்களுடன் பேச வேண்டும் என்பது தான். 
குளிர்சாதனப் பெட்டி எப்படி வேலை செய்கிறது?
நீதிமன்ற த்தில் சுதந்திர மாக செயல்பட வேண்டும் என்று கேட்டேன், ஆனால் இது வரை என்னால் சுதந்திர மாக செயல்பட முடிய வில்லை. 

நான் சுதந்திரமாக இருக்கிறேனா, இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடிய வில்லை. 

இது போன்ற சுதந்திர த்தை எதிர் பார்க்க வில்லை. இதுவும் மற்றொரு சிறை போல் இருக்குமோ என எண்ண தோன்று கிறது.

எல்லா குடி மக்களும் அனுபவி க்கும் அடிப்படை உரிமை களைத் தான் நான் கோருகி றேன். இதில் அரசியலோ, ஜாதியோ இல்லை. 

அகிலா என்கிற ஹாதியா யார்?
நான் நேசித்த ஒருவரை பார்க்க விரும்பு கிறேன். நீதிமன்றம் அனுமதி க்கும் என்று நம்பு கிறேன். என்னிடம் செல்போன் இல்லை. 

அடிப்படை சுதந்திரம் வேண்டும் என்று நான் நீதிமன்ற த்தில் கோரி இருந்த போதும், இது வரை நான் யாரையும் தொடர்பு கொண்டு பேசவே இல்லை. 

தற்போது கல்லூரி சிறை யில் சிக்கி யுள்ளேன் என வேதனை யோடு தெரி வித்தார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings